நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

‛உப்பனா' பட இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கத்தில் நடிகர் ராம் சரண் அடுத்து அவரது 16வது படமாக 'பெத்தி' எனும் படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக ஜான்வி கபூர் நடிக்கின்றார். சிவராஜ் குமார், ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
இத்திரைப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 27ம் தேதி அன்று திரைக்கு வருகிறது. ஏற்கனவே இதன் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. தற்போது சிவராஜ் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு சிவராஜ் குமாரின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளனர். இதில் கவுர் நாயுடு என்கிற கதாபாத்திரத்தில் சிவராஜ் குமார் நடிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.