300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
டி.வியில் குழந்தைகள் நிகழ்ச்சியில் பங்கேற்று வந்த நயன்தாரா 2003ம் ஆண்டு 'மனசிலக்கரே' என்ற படத்தின் மூலம் சினிமாவில் கால்பதித்தார். அதன்பிறகு சில மலையாள படங்களில் நடித்திருந்த நிலையில்தான் இயக்குனர் ஹரி தனது 'ஐயா' படத்தின் மூலம் தமிழில் அறிமுகப்படுத்தினார். அதில் அவர் சரத்குமார் ஜோடியாக நடித்தார்.
அதன்பிறகு 'சந்திரமுகி' படத்தில் அவர் நடித்தது பெரிய கேரக்டர் இல்லை என்றாலும் ரஜினி ஜோடி என்பது அவரது பலமாக இருந்தது. பிறகு நடித்த 'கஜினி' படம் அவருக்கு பெரிதாக உதவவில்லை. சாதாராண மருத்துவ கல்லூரி மாணவியாக நடித்தார்.
இனி இப்படியோ போனால் வேலைக்கு ஆகாது என்று நயன்தாரா கவர்ச்சியாக நடிக்க துணிந்தார். இதன் முதல் கட்டமாக 'சிவகாசி' படத்தில் கவர்ச்சி ஆட்டம் ஆடினார். அடுத்து அவர் எஸ்.ஜே.சூர்யா நடித்த 'கள்வனின் காதலி' படத்தின் மூலம்தான் முழுமையான கவர்ச்சிக்கு மாறினார். இந்த படத்தின் இயக்குனர் தமிழ்வண்ணன் என்றாலும், இது எஸ்.ஜே.சூர்யா படமாகவே பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவும், நயன்தாராவும் ஒரே பேண்டை அணிந்து நின்ற காட்சி பெரிய பேனர்களாக வைக்கப்பட்டு படத்திற்கு பரபரப்பு கூட்டினர். பின்னர் படத்தில் நயன்தாராவும், எஸ்.ஜே.சூர்யாவும் நெருக்கமாக நடித்த காட்சிகள் பரபரப்பாகின. இந்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை என்றாலும் நயன்தாரா கேரியரில் முக்கியமான படமானது.
தற்போது இந்த படத்தை நவீன தொழில் நுட்பத்தில் ரீ ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது.