300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' எனும் படத்தை தனது 25வது படமாக நடித்து வருகிறார். இதற்கிடையில் சிவகார்த்திகேயன் அவரின் 24வது படத்தை குறுகிய காலக்கட்டத்தில் நடிக்கவுள்ளார். குட் நைட் பட இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் தான் இதை இயக்குகிறார். பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை வருகின்ற ஆகஸ்ட் மாத இரண்டாம் வாரத்தில் தொடங்கவுள்ளனர் என ஏற்கனவே தகவல் வெளியானது. இந்த நிலையில் இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்கிறாராம். ஆனால் அவரின் கால்ஷீட் இவர்கள் படப்பிடிப்பு நடத்தும் நாட்களில் ஒத்துவரவில்லை. அதனால் இந்த படத்தின் படப்பிடிப்பை அடுத்த வருடத்திற்கு தள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கவுள்ள படத்தை தொடங்கலாமா என படக்குழுவினர் யோசித்து வருகின்றனராம்.