பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! |
சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ் நடித்த ‛லவ் மேரேஜ்' படத்தின் நன்றி அறிவிப்பு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் பேசிய ஹீரோ விக்ரம்பிரபு, ''ஒரு படத்தில் நடித்து முடிந்து, அந்த படம் ரிலீஸ் ஆனால் போதும், என் பணி முடிந்துவிட்டது என நிறைவாக இருப்பேன். ஆனால், இந்த பட ரிலீசுக்குபின் புரமோசனுக்காக நிறைய ஊர் சென்றோம். குறிப்பாக, மதுரைக்கு சென்றேன். அங்கு ரசிகர்கள் கொடுத்த உற்சாகம் அதிகம். சென்னையிலும் பல தியேட்டர்களில் எங்களுக்கு நல்ல மகிழ்ச்சி கிடைத்தது.
இந்த படத்தில் வெற்றிக்கு ஷான் ரோல்டன் இசை ஒரு ஆன்மாவாக இருந்தது. இரண்டு ஹீரோயின்களும் பில்லர்கள், அற்புதமாக நடித்து இருந்தார்கள். இந்த படம் பார்த்த அப்பா, சண்டைக்காட்சிகளை பாராட்டினார். இறுகப்பற்று படம் பார்த்துவிட்டு, இந்த கேரக்டரை எனக்கு கொடுத்து இருக்கிறார் இயக்குனர். இந்த படமும் ஹிட்டானது மகிழ்ச்சி. டைப் காஸ்ட் பிரச்னையில் சிக்கி இருந்த என்னை இந்த படம் வேறு வழி காண்பித்துள்ளது. அனைவருக்கும் நன்றி' என்றார்.
ஆனால் நன்றி அறிவிப்பு விழாவில் படம் எந்த அளவுக்கு வெற்றி , எத்தனை கோடி வசூல், எவ்வளவு லாபம் என்று வெளிப்படையாக, மறைமுக சொல்லவில்லை. சின்ன பட்ஜெட் படம் என்பதால் சிறிது காலத்தில் படம் தப்பித்துவிட்டது. அதனால், இந்த வெற்றி விழா என்று கூறப்படுகிறது.