சீதா மாதாவின் ஆசீர்வாதம் : சாய் பல்லவி மகிழ்ச்சி | பாலிவுட்டில் தென்னிந்திய நடிகர்களுக்கு மரியாதை இல்லையா : பிரியாமணி பதில் | 'பாபநாசம்' படத்தில் என் முதல் சாய்ஸ் ரஜினிதான்: ஜீத்து ஜோசப் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் |
இந்தவாரம் வெளியான 3பிஹெச்கே படத்தில் அப்பா கேரக்டரில் ரொம்பவே அமைதியாக நடித்து இருந்தார் சரத்குமார். அவர் நடிப்பு பேசப்பட்டது. அவரும் படம் குறித்து நிறைய பேட்டிகளில் பேசினார். படத்தின் பிரிமியர் ஷோ, பிரஸ் ஷோவுக்கு வந்து இருந்தார்.
இந்தவாரம் வெளியான பீனிக்ஸ் படத்தில் சரத்குமார் மகள் வரலட்சுமி வில்லி வேடத்தில் நடித்து இருந்தார். ஆனாலும், அவர் படத்தின் எந்த பிரமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. படம் குறித்தும் வெளிப்படையாக பேசவில்லை. ஆனாலும், அப்பா நடித்த படமும், மகள் நடித்த படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகியுள்ளது.
அதேபோல் 3பிஹெச்கே படத்தை தயாரித்தவர் அருண் விஷ்வா. இவர் பல ஆண்டுகள் இயக்குனர் ராமிடம் உதவியாளராக இருந்தவர். இதே வாரம் ராம் இயக்கிய பறந்து போ படமும் ரிலீஸ் ஆகியுள்ளது. ஆக, இந்த வாரம் குருவும், சிஷ்யனும் மோதி இருப்பதும் நடந்து இருக்கிறது.