பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்த அஜித் குமார், அதையடுத்து கார் பந்தயங்களில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். இந்த நேரத்தில் அஜித்தின் 64வது படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்கப் போவதாகவும், அந்த படம் நவம்பர் மாதத்தில் இருந்து தொடங்க இருப்பதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. என்றாலும் அஜித் தரப்பு அது குறித்து அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடாமல் இருந்தார்கள்.
இந்தநிலையில் இன்று அஜித்தின் மேலாளரான சுரேஷ் சந்திரா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், அஜித்தின் 64-வது படம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அவர் தெரிவித்திருக்கிறார். அதனால் கூடிய சீக்கிரமே அப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்பது தெரிய வந்திருக்கிறது. அப்போதுதான் அஜித் 64 வது படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்குகிறாரா? இல்லை வேறு இயக்குனர் இயக்குகிறாரா? என்பது தெரியவரும்.