தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் | 2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி | டீசலுக்கு பின்னால் இருக்கும் அரசியலை பேசும் படம் | பீரியட் பிலிமில் ஐஎன்ஏ அதிகாரியாக நடிக்கும் சசிகுமார் | பிளாஷ்பேக்: நடிகராக ஜெயிக்க முடியாத சிவாஜி வாரிசு |
தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள 'குபேரா' படம் நாளை பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. இப்படம் தமிழிலும் படமாக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் தமிழ் ரசிகர்களிடம் எழுந்துள்ளது. அதனால், தனுஷின் படங்களுக்கு உள்ள வழக்கமான ஆன்லைன் முன்பதிவு கூட இந்தப் படத்திற்கு இல்லை. முதல் நாள் முதல் காட்சிகள் கூட பெரும்பாலும் ஹவுஸ்புல் ஆகவில்லை.
ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் உருவாகும் படம் என்றாலே ரசிகர்களுக்கு சந்தேகம் வந்துவிடுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பும் தமிழகத்தில் நடைபெறவேயில்லை என்றே சொல்கிறார்கள்.
இதனிடையே, சமீபத்திய பேட்டி ஒன்றில் சேகர் கம்முலா, “என்னுடைய முதலாவது பான் இந்தியா படம். பல சவால்களை நான் சந்திக்க வேண்டி இருந்தது. தெலுங்கு, தமிழில் தனித்தனியாக படமாக்கினோம். அப்போதுதான் 'லிப் சின்க்' சரியாக இருக்கும். ஒரே சமயத்தில் இரண்டு படங்களைப் படமாக்குவதற்கு இது சமம். அதனால், படமாக்க நேரம் எடுக்கும். படப்பிடிப்புக்குப் பிந்தைய வேலைகள் பான் இந்தியா படம் என்றால் மொத்தமாக வேறு ஒரு தளத்தில் இருக்கும். ஒவ்வொரு பாடல், வசனம் என அனைத்துமே அனைத்து மொழிகளிலும் சரி பார்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இயக்குனரே இது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவான படம் என்று சொல்லிவிட்டார். படத்தைப் பார்த்த பிறகு ரசிகர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்று காத்திருப்போம்.