‛‛திரும்பி போற ஐடியா இல்ல... ஐயம் கம்மிங்...'' : விஜயின் ‛ஜனநாயகன்' டிரைலர் வெளியீடு | ‛ஜனநாயகன்' சென்சார் சான்று தடுப்பது யாரோ.? | ‛தி ராஜா சாப்' திருப்புமுனையாக அமையும் : நிதி அகர்வால் நம்பிக்கை | பாக்யராஜ் 50 : முதல்வருக்கு அழைப்பு | பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கிர்த்தி ஷெட்டி | யு.கே-வில் பராசக்தி முன்பதிவு விவரம் | முதல்வர் தலைமையில் ரஜினி, கமல் கலந்து கொள்ளும் நிகழ்வு எது தெரியுமா | மவுன படமான ‛காந்தி டாக்ஸ்' ஜனவரி 30ல் ரிலீஸ் | ரஜினியுடன் அனிருத் இணையும் 7வது படம் | சாயா தேவியின் 'அலப்பறை' |

கடந்த 2023ல் தெலுங்கில் நடிகர்கள் வெங்கடேஷ், ராணா ரகுபதி இருவரும் இணைந்து நடிக்க 'ராணா நாயுடு' என்கிற வெப்சீரிஸ் வெளியானது. இதற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இதன் இரண்டாவது சீசன் 'ராணா நாயுடு சீசன் 2' என்கிற பெயரில் கடந்த வாரம் வெளியானது. இந்த இரண்டாவது சீசனை ரசிகர்களிடம் இன்னும் நெருக்கமாக கொண்டு செல்வதற்காக வித்தியாசமான புரமோஷன் யுக்தியை கையில் எடுத்துள்ளார்கள்.
அதாவது ராணா பல பிரச்னைகளால் தூங்க முடியாமல் தவிப்பது போலவும் அப்போது நள்ளிரவில் அவரை தேடி கட்டப்பா உருவத்தில் சத்யராஜ் அவரது வீட்டுக்கே தேடி வருவது போலவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ள உரையாடலில் சத்யராஜ், ராணாவிடம் பேசும்போது, “ஆயிரம் வருடங்கள் ஆனால் கூட உருவம் தான் மாறி இருக்கிறதே தவிர உங்கள் குணாதிசயம் மாறவில்லை... ஆமாம் ஏன் இன்னும் தூங்காமல் இருக்கிறீர்கள்” என்று கேட்கிறார்.
அதற்கு ராணா, ''குடும்ப பிரச்னை காரணமாக தூங்க முடியவில்லை. உனக்கும் குடும்பம் இருந்தால் இது தெரிந்திருக்கும்'' என்று கூறுகிறார். உடனே சத்யராஜ் ''அங்கே மகிழ்மதி சாம்ராஜ்யத்தையே நம் மொத்த கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருந்தோம். வீட்டில் இருக்கும் நான்கு பேரை உங்களால் கட்டுப்படுத்த முடியவில்லையா'' என்று கூறுகிறார். இப்படியே உரையாடலை வளர்த்து கடைசியில் ராணா நாயுடு வெப் சீரிஸை இருவரும் அமர்ந்து பார்ப்பதாக அந்த வீடியோ முடிகிறது. தற்போது ரசிகர்களிடம் இந்த வீடியோ மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது.