2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி | டீசலுக்கு பின்னால் இருக்கும் அரசியலை பேசும் படம் | பீரியட் பிலிமில் ஐஎன்ஏ அதிகாரியாக நடிக்கும் சசிகுமார் | பிளாஷ்பேக்: நடிகராக ஜெயிக்க முடியாத சிவாஜி வாரிசு | நடிகை வைஜெயந்தி மாலா நலம் : மகன் தகவல் | பிளாஷ்பேக்: கருணாநிதியுடன் இணைந்து படம் தயாரித்த எம்ஜிஆர் | அறிக்கையும் இல்லை, கொண்டாட்டமும் இல்லை : இது அஜித் பாலிசி | விதார்த்தை சீனியர் என்றார் அம்மாவாக நடித்த ரக்ஷனா | கரூர் சம்பவத்தால் காலியான குஷி வசூல் | ரிஷப் ஷெட்டியைப் பாராட்டிய ஜூனியர் என்டிஆர் |
நடிகர் திலகத்தின் வாரிசுகள் பிரபும், ராம்குமாரும். பிரபு சினிமாவில் அறிமுகமாகி 250 படங்களுக்கு மேல் நடித்து விட்டார். ஆனால் இன்னொரு வாரிசான ராம்குமாத சினிமாவில் வெற்றி பெற முடியவில்லை.
ஆரம்பத்தில் நடிப்பு ஆர்வம் இல்லாத ராம்குமார் படம் தயாரிப்பதில் ஆர்வம் காட்டினார். சிவாஜி புரொடக்ஷன் நிறுவனத்தை நிர்வகித்து வந்தார். 1986ம் ஆண்டு 'அறுவடை நாள்' என்ற படத்தை தயாரித்தார், இதனை தற்போது நடிகராக இருக்கும் ஜி.எம்.குமார் இயக்கினார். இதில் பிரபுவும், பல்லவியும் காதலர்களாக நடித்தனர். அவர்களுக்கு உதவும் கிறிஸ்தவ பாதிரியாராக ராம்குமார் நடித்தார்.
படம் வெற்றி பெற்ற போதும் ராம்குமாருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. என்றாலும் 'மைடியர் மார்த்தாண்டன்' உள்ளிட்ட சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தார். ரஜினியின் 'சந்திரமுகி' படத்தில் வரும் ஒரு பாடலில் சில வினாடிகள் வந்துபோவார். ஷங்கர் இயக்கிய 'ஐ' படத்தில் வில்லனாக ரீ எண்ட்ரி ஆனார். அதன்பிறகும் பெரிய வாய்ப்புகள் இல்லை. சில படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்தார்.