மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் |
பர்ஸ்ட் லைன் என்ற நிறுவனத்தின் சார்பில் உமாபதி தயாரித்துள்ள படம் 'ஹும்'. எஸ். கிருஷ்ண வேல் இயக்கி உள்ளார். புதுமுகங்கள் கணேஷ் கோபிநாத் - ஐஸ்வர்யா நாயகன் நாயகி நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் படத்தில் முகத்தை காட்டாமல் நடித்துள்ளனர்.
இது குறித்து இயக்குனர் கிருஷ்ணவேல் கூறியதாவது: திரைப்படத் துறைக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நான் எந்த இயக்குநரிடமும் உதவியாளராக பணியாற்றவில்லை. எந்த உதவி இயக்குநரும் எனக்கு நண்பராகவும் இல்லை. இந்த நிலையில் இந்த திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்று எனக்கு ஏன் தோன்றியது? என்றால் அடிப்படையில் நான் ஒரு சர்வைவர்.
கொரோனா காலகட்டத்தில் என்னுடைய நண்பர் ஒருவர் அவருடைய மகளை நாயகியாக முன்னிறுத்தி திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் என சொன்னார். அதற்காக ஒரு கதையை எழுதினோம். கதை எழுதிய பிறகு தயாரிப்பாளர் பின்வாங்கி விட்டார். அந்தத் தருணத்தில் தான் யாருடைய முகத்தையும் காண்பிக்காமல் ஒரு படத்தை உருவாக்கலாம் என நினைத்து இப்படத்தின் கதையை எழுதத் தொடங்கினேன்.
'முந்தானை முடிச்சு' திரைப்படத்தில் பாக்கியராஜ் கதாபாத்திரத்திற்கு பெயர் இருக்காது. அதுவும் இந்த திரைப்படத்திற்கு ஒரு இன்ஸ்பிரேஷன். முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் 'ஓர் இரவு' எனும் திரைப்படமும் இன்ஸ்பிரேஷன், பார்த்திபனின் படங்களும் இன்ஸ்பிரேஷன். இப்படியாக ஒரு வித்தியாசமான படத்தை உருவாக்க வேண்டும் என்று முயற்சித்து இருக்கிறேன்.
பெண்களின் பாதுகாப்பு குறித்து, பெண்கள் எதைக் கண்டு அச்சப்படக்கூடாது என்பது குறித்து, ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும். இது பல படங்களின் தழுவலாகவும் இருக்கலாம். சாயலாகவும் இருக்கலாம். காப்பி என்று கூட சிலர் சொல்லலாம். ஆனால் கதை புதிது. அதற்கு நான் உத்திரவாதம். இந்த படம் கண்டிப்பாக பேசப்படும் என நம்புகிறேன்'' என்றார்.