2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் |
மலையாள திரையுலகில் வெளியாகி முதன் முதலில் 50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த படம் ‛திரிஷ்யம்'. ஜீத்து ஜோசப், மோகன்லால் கூட்டணியில் வெளியான இந்த படம் பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. கதையின் முக்கிய திருப்பத்திற்கு காரணமாக அமைந்த வருண் பிரபாகர் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்த ரோஷன் பஷீர் மலையாளம் மட்டுமல்லாது தமிழ் மற்றும் தெலுங்கிலும் தன்னுடைய அதே கதாபாத்திரத்தில் நடித்தார்.
இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்ததை தொடர்ந்து அங்கே கொலம்பஸ், மல்லி பெல்லி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இந்த நிலையில் தற்போது தெலுங்கில் உருவாகி வரும் புதிய படம் ஒன்று முதல் முறையாக காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம் ரோஷன் பஷீர். அது மட்டுமல்ல மலையாளத்தில் ஹனிரோஸ் நடிப்பில் உருவாகி வரும் ‛ரேச்சல்' மற்றும் தமிழில் உருவாகும் ‛ஆல் பாஸ்' உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ள இவர், தன்னுடைய கதாபாத்திரம் காரணமாக திரிஷ்யம் படத்தின் அடுத்தடுத்த பாகங்களில் தன்னால் நடிக்க முடியாமல் போனது எனக்கு வருத்தமே என்றும் கூறியுள்ளார்.