Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சூர்யாவின் 'டிராப் இயக்குனர்கள்' பட்டியலில் இணைகிறாரா வெற்றிமாறன்?

14 ஜூன், 2025 - 06:14 IST
எழுத்தின் அளவு:
Is-Vetrimaaran-joining-the-list-of-Suriyas-drop-directors

தமிழ் சினிமாவில் சமீபத்திய காலத்தில் டிராப் ஆன படங்களின் பட்டியலில் சூர்யாவின் படங்கள்தான் அதிகம் இருக்கும். அவருக்கு திருப்புமுனையும், நல்ல வெற்றியையும் பெற்றுத் தந்த இயக்குனர்களுடன் 'கருத்து வேறுபாடு' வந்து அறிவிக்கப்பட்ட படங்கள் 'டிராப்' ஆகியுள்ளன. அந்த வரிசையில் தற்போது 'வாடிவாசல்' படமும், அதன் இயக்குனர் வெற்றிமாறனும் இணைகிறார்களோ என்ற சந்தேகம் ஏறக்குறைய உறுதியாகிவிட்டது என கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.

இதற்கு முன்பு 'துருவ நட்சத்திரம் - கவுதம் மேனன்', 'அருவா - ஹரி', 'வணங்கான் - பாலா', 'புறநானூறு - சுதா கொங்கரா' ஆகிய படங்களும் இயக்குனர்களுடனும் சூர்யாவின் படம் அறிவிக்கப்பட்டு சில பல காரணங்களால் 'டிராப்' ஆனது. குறிப்பாக அந்தப் படங்களில் தொடர்ந்து பணி புரிய சூர்யா விரும்பவில்லை என்பதுதான் காரணம் என்றார்கள்.

'நந்தா' படம் மூலம் பாலா, 'காக்க காக்க' படம் மூலம் கவுதம் மேனன்', 'ஆறு' படம் மூலம் ஹரி, 'சூரரைப் போற்று' படம் மூலம் சுதா ஆகியோர் சூர்யாவிற்கு குறிப்பிடத்தக்க திருப்பத்தைத் தந்தார்கள்.

இப்போது 'வாடிவாசல்' படத்திற்காக வெற்றிமாறன் தந்த திரைக்கதையில் சூர்யா சில திருத்தங்களைச் சொல்லி இருக்கிறார். அடுத்து முழுமையான திரைக்கதை புத்தகத்தை வெற்றிமாறன் தரவேயில்லையாம். அதை தந்தால்தான் படப்பிடிப்பு நடத்துவது சரியாக இருக்கும் என சூர்யா கேட்டிருக்கிறார். வெற்றிமாறனுக்கு அந்த 'பவுண்டட் ஸ்கிரிப்ட்' என்பதை எழுதும் பழக்கமேயில்லையாம். இப்படியே போனால் சரியாக இருக்காது என சூர்யா ஒதுங்கிவிட்டார் என்கிறார்கள்.

அதற்குப் பதிலாக வேறொரு இயக்குனரைச் சொல்லுங்கள், உங்களது தயாரிப்பில் நடிக்கிறேன் என 'வாடிவாசல்' தயாரிப்பாளர் தாணுவிடமும் சூர்யா சொல்லிவிட்டாராம். வெற்றிமாறன் இயக்கத்தில் வேறொரு கதையில், வேறொரு நடிகர் தாணு தயாரிப்பில் நடிக்க உள்ளார் என்கிறார்கள்.

எந்தப் படத்தின் அறிவிப்பு முதலில் வரும் என்பது விரைவில் தெரிந்துவிடும்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான அனுஷ்காவின் காட்டிஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான ... திருமணமா...? வதந்திகளை பரப்பாதீர்கள் : அனிருத் திருமணமா...? வதந்திகளை பரப்பாதீர்கள் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

15 ஜூன், 2025 - 09:06 Report Abuse
சேகர் இவரே நடிகர் லிஸ்டில் கமலோடு சேர்க்க படுவார். இவரே தயாரித்து அல்லது இவரே ஃபைனான்சியர் ஆகி நடித்து கொண்டால் உண்டு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in