நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் |
பிரபல தெலுங்கு ஹீரோயினான ஸ்ரீலீலாவுக்கு இன்று 24வது பிறந்தநாள். அவருக்கு சோஷியல் மீடியாவில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள் ரசிகர்கள். இதுவரை தமிழில் ஸ்ரீலீலா நடித்த படம் வந்தது இல்லை. புஷ்பா2 படத்தில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்டு இருக்கிறார். இப்போது சுதா கொங்கரா இயக்கும் பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்து வருகிறார்.
1960, 70களில் அந்த கதை நடப்பதால் பக்கா ஹோம்லியாக நடித்து இருப்பதாக தகவல். அடுத்து அவர் நடித்த கிஸ் என்ற படமும் தமிழில் தயாராகி வருகிறது. தமிழில் பல முன்னணி ஹீரோக்கள் ஸ்ரீலீலாவுடன் டுயட் பாட ஆசைப்படுகிறார்கள். ஆனாலும், அவர் தெலுங்கு சினிமாவுக்கே முக்கியத்துவம் கொடுப்பதாக கேள்வி. அடுத்த சில ஆண்டுகள் தென்னிந்திய சினிமாவில் ஸ்ரீலீலா, கயாடு லோஹர் , பூஜா ஹேக்டே, மமிதா பைஜூ போன்றவர்கள் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். இப்போதுள்ள பல முன்னணி ஹீரோயின்கள் 35, 40 வயதை தாண்டிவிட்டதால் இந்த மாற்றம் ஏற்படும் என கூறப்படுகிறது.