100 கோடி வசூலைக் கடந்த 'ஹரிஹர வீரமல்லு' | 'சாயரா' இந்தியாவில் நிகர வசூல் 250 கோடி | 'அவதார் - பயர் அண்ட் ஆஷ்' டிரைலர் ரிலீஸ் | ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் |
ஜியோ ஹாட்ஸ்டார் , ஜிகேஎஸ் புரொடக்ஷன், செவன் சீஸ் மற்றும் செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'பறந்து போ'. ராம் இயக்கி உள்ளார். மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் தயாநிதி இசை அமைத்துள்ளார். வருகிற ஜூலை 4ம் தேதி வெளியாகிறது.
இதைத்தொடர்ந்து படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. விழாவில் படக்குழுவினருடன் இயக்குனர்கள் மிஷ்கின், மாரி செல்வராஜ், ரஞ்சித் ஜெயக்கொடி, மீரா கதிரவன், நடிகர் சித்தார்த், தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு, சுரேஷ் காமாட்சி, அருண் விஸ்வா, மாரி செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் இயக்குனர் மிஷ்கின் பேசியதாவது : ஒரு நாளைக்கு படவிழாவில் கலந்து கொள்ளுமாறு எனக்கு அழைப்பு விடுத்து நிறைய போன் வருகிறது. இது போன்ற விழாவுக்கு என்னை அழைத்தால் இனிமேல் அதற்கான தொகையாக குறைந்தபட்சம் 5 லட்சம் கொடுத்து விடுங்கள். அது என் மகள் முதுகலை படிப்பு படிக்க உதவும். இல்லை ஏதாவது ஒரு வகையில் உதவும்.
இப்போது விமர்சனங்கள் குறித்து நிறைய பேசுகிறார்கள். நல்ல படத்தை ஆதரிக்கணும். படம் பிடிக்கலைன்னா கிழிச்சிடணும். நான் துாங்கி நாலைந்து நாட்கள் ஆச்சு. எனக்கு நிறைய வேலை இருக்கிறது. நிறைய படிக்க தொடங்கியிருக்கிறேன். பல தொழில்களை செய்துவிட்டு தான் சினிமாவுக்கு வந்தேன். 'பிசாசு-2', 'டிரெயின்' படங்களுக்கு பிறகு மிஷ்கின் இருந்த இடமே தெரியாமல் போய்விடுவார் என்று பேசுகிறார்கள்.
சீக்கிரம் சினிமாவை விட்டு போக வேண்டும் என்று நான் நினைக்கிறேன். சினிமாவில் அவ்வளவு சந்தோஷமாக நான் இல்லை. மிகவும் சந்தோஷமாக படங்கள் செய்த காலம் போய்விட்டது. இப்போது அதிக போட்டி இருக்கிறது. ரத்தம் சொட்ட சொட்டத்தான் நான் சினிமாவில் தங்கியிருக்கிறேன்.
ராம் படங்களை பார்க்கும் பொழுது எப்போதுமே அதிசயம் போல தான் இருக்கும். 'பறந்து போ' படமும் நிச்சயம் குடும்பங்கள் ரசிக்கும் வகையில் இருக்கும். அழகான படம். என்றார்.