ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
இந்தியாவில் தயாராகி வெளியாகும் படங்களை தணிக்கை செய்ய மத்திய அரசால் தணிக்கை வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாரியத்தில் அந்தந்த மாநில பிரநிதிகளுடன் தணிக்கை அதிகாரியும் இடம்பெறுவார். தற்போது யு (அனைவரும் பார்க்க தகுந்த படம்), ஏ (18 வயதுக்கு மேற்பட்டோர் மட்டும் பார்க்கத்தகுந்த படம்), யுஏ (பெற்றோர் அனுமதியுடன் 18 வயதுக்கு குறைவானவர்களும் பார்க்கத் தகுந்த படம்) ஆகிய சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இப்போது இதில் சில திருத்தங்களை தணிக்கை வாரியம் கொண்டு வருகிறது. அதன்படி 7 வயதுக்கு மேல் (யு7+), 13 வயதுக்கு மேல் (யுஏ/13+) மற்றும் 16 வயதுக்கு மேல் (ஏ/16+) என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து தணிக்கை வாரிய வட்டார தகவல்களின் படி "இந்த மாற்றம், குழந்தைகள், இளம் பார்வையாளர்கள் ஆகியோரின் பாதுகாப்பையும், உணர்வையும் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 13 வயதிற்கும் கீழ் உள்ள பிள்ளைகள் சில சமயங்களில் பதட்டத்தையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்தக்கூடிய காட்சிகளை புரிந்துகொள்ள ஏற்படும் சிக்கலில் இருந்து விடுபட உதவும். சமூக பாதுகாப்பு, பெற்றோர் வழிகாட்டல், மற்றும் விளம்பர ஒழுங்குகள் போன்றவை இந்த புதிய விதிமுறைகளில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் ஜூலை முதல் முழுமையாக நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்" என்று தெரிகிறது.