'ஹவுஸ் மேட்ஸ்' மூலம் தமிழுக்கு வரும் அர்ஷா பைஜு | ரஜினி நடிக்கும் கூலி படக்கதை என்ன? ஆகஸ்ட் 2ல் டிரைலரில் தெரியும்...! | குற்றம் கடிதல் 2 உருவாகிறது : கதைநாயகன் ஒரு நல்லாசிரியர் | ரத்து செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியை மீண்டும் நடத்தும் அனிருத் | பிளாஷ்பேக்: வில்லனை ஆதரித்த கமல் | பிறந்தநாளில் ரசிகர்கள் ஆசையை நிறைவேற்றிய தனுஷ் | பிளாஷ்பேக்: டைட்டிலில் பெயர் போட்டுக்கொள்ளாத தயாரிப்பாளர் | எம்ஜிஆர் - கருணாநிதி, நட்பு, மோதல் தழுவலில் 'காந்தா'? | கோவாவில் கூடிய 90 ஸ்டார்ஸ் : ஆட்டம், பாட்டம்,பார்ட்டி என கொண்டாட்டம் | 25 நாட்களைக் கடந்த '3 பிஹெச்கே, பறந்து போ' |
நயன்தாரா நடித்த 'அறம்' படத்தை இயக்கிய கோபி நயினார், தற்போது இயக்கி உள்ள படம் 'மனுஷி'. இந்த படத்தை வெற்றிமாறன் தயாரித்துள்ளார். ஆண்ட்ரியா நடித்துள்ளார். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் ஒரு பெண், போலீஸ் நிலையத்தில் அனுபவிக்கும் கொடுமைதான் படத்தின் கதை. இந்த படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், இந்த படம் அரசின் செயல்பாடுகளை மோசமாக விமர்சிக்கிறது. காவல்துறையின் நன்மதிப்பை குறைக்கிறது என்று தணிக்கை சான்றிதழ் தர மறுத்து விட்டது.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் வெற்றிமாறன் வழக்கு தொடர்ந்தார். அதில், அவர் தாக்கல் செய்த மனுவில் 'நிபுணர் குழு அமைத்து இந்த படத்தை மீண்டும் மறுஆய்வு செய்து தணிக்கை சான்று வழங்க உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தணிக்கை வாரியம் தரப்பில், “மனுஷி திரைப்படத்தை மீண்டும் பார்வையிட்டு மறுஆய்வு செய்ய இருப்பதாகவும், அதில் உள்ள ஆட்சேபகரமான காட்சிகள், வசனங்களை நீக்கும்படி மனுதாரருக்கு தெரிவிக்கப்படும். அதையேற்று மனுதாரர், அந்த காட்சிகளை நீக்கினால் அதன்பிறகு எந்த சான்று வழங்குவது என்ற முடிவை மறுஆய்வுக்குழு எடுக்கும். ஒருவேளை அந்த காட்சிகளை நீக்க மறுத்தால் அதுதொடர்பாக உரிய அறிக்கை தாக்கல் செய்யப்படும்'' என்று கூறப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை வருகிற 17ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.