ரஜினி, கமல் இணையும் படம்: லோகேஷ் கனகராஜ்க்கு எதிர்ப்பு | பாட்டு பாடி வட்டி கட்டினார் எஸ்.பி.பி: பாடகர் மனோ சொன்ன ஷாக்கிங் நியூஸ் | கிரிஷ் 4ம் பாகத்தில் இணையும் ராஷ்மிகா? | மீண்டும் சிவகார்த்திகேயனிடம் கதை சொன்ன ஏ.ஆர்.முருகதாஸ் | பைசன் படத்தின் 2வது பாடல் வெளியானது | ‛யாத்திசை' இயக்குனருடன் இணையும் ரவி மோகன் | பிளாஷ்பேக்: பாலுமகேந்திரா ஓவியமாய் தீட்டிய முதல் திரைக்காவியம் “கோகிலா” | அக். 10ல் ஒளிபரப்பாகும் ‛வேடுவன்' வெப் தொடர் | மதராஸி ஓடிடி வெளியீடு எப்போது | சிம்புதேவன் இயக்கத்தில் விமல்? |
வளர்ந்து வரும் மலையாள நடிகை அர்ஷா பைஜு. ஆலப்புழா அருகே உள்ள மன்னாரில் பிறந்தவர். 'பேமிலி' என்ற மலையாள படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு குர்பானி, மதுரா மனோகர மோகன், முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தற்போது 'ஹவுஸ் மேட்ஸ்' மூலம் தமிழுக்கு வருகிறார். இதில் அவர் தர்ஷன் ஜோடியாக நடிக்கிறார்.
இவர்களுடன் காளி வெங்கட், வினோதினி, தீனா நடித்துள்ளனர். டி.ராஜவேல் இயக்கி இருக்கிறார். பிளேஸ்மித் ஸ்டூடியோஸ் சார்பில் எஸ்.விஜய பிரகாஷ் தயாரித்துள்ளார். எம்.எஸ்.சதீஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் வருகிற ஆகஸ்ட் 1ம் தேதி வெளியிடுகிறது.
தமிழில் அறிமுகமாவது குறித்து அர்ஷா பைஜு கூறும்போது "தமிழில் இது என்னுடைய முதல் படம். என்னை நம்பி இந்த கதாபாத்திரம் கொடுத்த ராஜவேல் அண்ணனுக்கு நன்றி. சிறப்பான குழுவோடு பணியாற்றி இருக்கிறேன். தர்ஷன் சிறந்த கோ- ஆக்டர். கடின உழைப்பாளி. காளி வெங்கட், வினோதினி போன்ற திறமை வாய்ந்த நடிகர்களுடன் நடித்தது மகிழ்ச்சி" என்றார்.