ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா மற்றும் பலர் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த படம் 'தக் லைப்'. இந்தப் படத்திற்கு கடுமையான விமர்சனங்களே அதிகம் வந்தன. தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் சினிமா ரசிகர்கள் படம் பற்றி அதிகமாகவே கமெண்ட் செய்தார்கள்.
இந்நிலையில் தெலுங்குத் திரையுலகத்தின் இளம் இயக்குரான பணிந்திர நர்செட்டி, மணிரத்னத்தை விமர்சிக்க ஒரு தகுதி வேண்டும் என்றும் காட்டமாகப் பேசியுள்ளார். அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள '8 வசந்தலு' படத்திற்காக அவர் அளித்த பேட்டி ஒன்றில் பேசும் போது, “ஒவ்வொருவருக்கும் அவரவர் கருத்துகளை வெளிப்படுத்த உரிமை இருக்கிறது. இருந்தாலும் மற்றவர்களைப் பற்றி கருத்து தெரிவிப்பதற்கு முன்பு நமக்கு ஒரு தகுதி இருக்க வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
'தக் லைப்' படம் வெளியான பின்பு, மணிரத்னம் எப்படி படங்களை உருவாக்க வேண்டும் என ரசிகர்கள் கற்றுக் கொடுக்கிறார்கள். இத்துறையில் 40 ஆண்டுகளாக இருக்கும் புகழ் பெற்ற இயக்குனர் மணிரத்னத்திற்கு பாடம் சொல்லித் தருகிறார்கள்.
இத்தனை ஆண்டு காலம் அவரது படங்களைப் பார்த்து போற்றிய ஒருவருக்கு நிச்சயமாக விமர்சிக்கும் உரிமை உண்டு. அவர்களால் மட்டுமே அந்த வலியை அறிய முடியும். ஆனால், சினிமா பற்றிய அறிவு கூட இல்லாதவர்கள் கருத்துக்களைச் சொல்லிவிட்டு கடந்து போகிறார்கள். எனவேதான், நான் இங்கே 'தகுதி' என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன்,” எனக் கூறியுள்ளார்.
சமீப காலங்களில் 'கருத்து' சொல்கிறோம், என சமூக வலைதளங்களில் கண்டபடி மரியாதை இல்லாமல் தரக்குறைவான விதத்தில் எழுதுவதும், வீடியோக்களில் பேசுவதும் பலருக்கு வாடிக்கையாகிவிட்டது.
சில யு டியூப் விமர்சனங்களில் கூட 'தக் லைப்' படம் பற்றி விமர்சனத்தை விட தனி நபர் தாக்குதல்கள்தான் அதிகம் இருந்ததாக பரவலான கருத்து உள்ளது.
தமிழ் இயக்குனர்கள் யாருமே மணிரத்னத்திற்கு ஆதரவாகப் பேசாத நிலையில் ஒரு தெலுங்கு இயக்குனர் இப்படி பேசியிருப்பது வரவேற்க வேண்டிய ஒன்று.