டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

ஹிந்தியில் 'தும் லகா கே ஹைஷா' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூமி பட்னேகர். பாலிவுட்டில் பல படங்களில் கவர்ச்சியாக நடித்து பிரபலமாகியுள்ளார். இந்த நிலையில் கவர்ச்சியாக நடிப்பது பற்றி பூமி பட்னேகர் கூறியதாவது: ஆரம்பத்தில் பக்கத்து வீட்டு பெண் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வந்தேன். அப்போது நடுத்தர வகையிலான கதாபாத்திரங்களுக்கே நான் பொருத்தமாக இருப்பதாக நினைத்தனர். காதல், நகைச்சுவை படங்களில் நடித்திருந்தாலும் நடுத்தர வகையிலான ரோல்களே அதிகம் வந்தன.
ஆனால் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என வாய்ப்பு தேடியதில்லை. இயற்கையாகவும், இயல்பாகவும் கவர்ச்சியாக நடிக்கும் படங்கள் வந்தன. பொதுவாக நடிகைகள் அவ்வளவு எளிதில் கவர்ச்சி காட்சிகளில் நடிக்க மாட்டார்கள். அப்படி நடித்தால் அவ்வாறான நடிகைகளை கொண்டாடவில்லை என்றாலும், விமர்சிக்காமல் இருந்தால் போதும். நடிகை என்றால் இப்படியெல்லாம் நடித்துதான் ஆக வேண்டும் என்றெல்லாம் பேசுவது வேதனையாக உள்ளது.
காதல் காட்சிகளில் நடிப்பதற்கு கூட குறிப்பிட்ட அளவிலான நடிப்பு தேவை. அதுபோல கவர்ச்சியில் நடிக்கும் பெண்களின் உணர்ச்சிகளையும் புரிந்துகொள்ளும் மனப்பக்குவம் அனைவருக்கும் வரவேண்டும். அப்போதுதான் நடிகைகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.