விஜயகாந்த் பற்றி விஜய்யின் 'அண்ணன்' பேச்சு : மகன் சண்முக பாண்டியன் சொன்ன பதில் | 300 கோடி வசூல் கடந்தும் நஷ்டத்தை சந்திக்கும் 'வார் 2' | அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடையில்லை : நீதிமன்றம் உத்தரவு | 'மதராஸி'யில் வட இந்தியர், தென் இந்தியர் மோதலா? : ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆரின் 'இதயக்கனி'க்கு இன்று பொன்விழா | பேண்டஸி படமாக 'விஸ்வம்பரா' | தமிழ் படத்தில் இங்கிலாந்து நடிகை | நடிகை பாலியல் குற்றச்சாட்டு : கேரள இளைஞர் காங்கிரஸ் பதவியை ராஜினாமா செய்த எம்.எல்.ஏ | பிளாஷ்பேக் : அவமானங்களை வெகுமானமாக்கி வென்ற சிரஞ்சீவி | ரஜினிகாந்த் 50 : விழா நடத்துமா தமிழ்த் திரையுலகம்? |
தமிழ் சினிமாவில் இன்றைக்கு எவர்க்ரீன் கதைக்கருவாக இருப்பது பாசம். அம்மா பாசம், அண்ணன் பாசம், தங்கைப் பாசம், அப்பா பாசம் ஆகியவற்றைப் பற்றித்தான் அதிகமான படங்கள் வரும். தாய் மாமன் பாசம் என்பது அபூர்வம். அப்படியான ஒரு பாசத்தை மையமாக வைத்து நேரடியாகவே 'மாமன்' என்ற பெயருடன் நாளை வெளியாக உள்ளது சூரி நடித்துள்ள படம். சமீப காலங்களில் இப்படியான பாசக் கதைகளை எமோஷனல் ஆக சொல்லி சில படங்கள் நல்ல வெற்றியைப் பெற்றுள்ளன.
'லப்பர் பந்து, குடும்பஸ்தன், டூரிஸ்ட் பேமிலி' ஆகியவை இப்படியான பாசக் கதைகள்தான். அப்படியான ஒரு வரவேற்பு 'மாமன்' படத்திற்குக் கிடைக்குமா என்பது நாளை தெரிந்துவிடும்.
ஒரு பக்கம் பாசக் கதை என்றால் மறுபக்கம் பேய்க் கதை. பல வருடங்களாகவே பேய்ப் படங்கள் வந்தாலும் 'காஞ்சனா' பேய் வந்த பிறகுதான் நிறைய பேய்ப் படங்கள் வர ஆரம்பித்தன. அவற்றில் சில பெரும் வெற்றியையும் பெற்றுள்ளன. சந்தானம் கதாநாயகனாக மாறிய பின் அவருக்கு காமெடிப் படங்கள் கை கொடுத்ததை விட 'கோஸ்ட்' படங்கள்தான் வசூலை அள்ளித் தந்தன. 'தில்லுக்கு துட்டு, டிடி ரிட்டர்ன்ஸ்' இரண்டுமே நல்ல ரிட்டர்ன்ஸ் தந்தன. அந்த வரிசையில் நாளை 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல் வருகிறது. வழக்கம் போல பேயும், காமெடியும் இணைந்த இந்தப் படம் சந்தானத்திற்கு ஹாட்ரிக் வெற்றியைத் தருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பேய், பாசம் இரண்டில் எது வெற்றி பெற்றாலும் அல்லது இரண்டுமே வெற்றி பெற்றாலும் அடுத்தடுத்து இது போன்ற படங்களை எதிர்பார்க்கலாம்.