மீண்டும் ஹிந்தியில் கீர்த்தி சுரேஷ் | என் அழகான வாழ்க்கை துணை கெனிஷா : ரவி மோகன் அறிவிப்பு | ''பிள்ளைகளுக்காகவே வாழ்கிறேன்; என்னை தங்க முட்டையாகவே பார்த்தனர்'': ரவி மோகன் 'ஓபன் டாக்' | பாலகிருஷ்ணாவிற்கு கதை கூறிய ஆதிக் ரவிச்சந்திரன் | கிஸ் படம் ஜூலை மாதம் வெளியாகிறது | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் | ஈகாவுக்கும், லவ்லிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை : லியோ பட இளம் நடிகர் விளக்கம் | சூரியின் நட்புக்காக மாமன் கேரள புரமோஷனில் கலந்துகொண்ட உன்னி முகுந்தன் | மோகன்லால் பட ரீமேக் : கல்யாணி பிரியதர்ஷனின் வித்தியாசமான ஆசை | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்த கேரள அமைச்சர் |
இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் படத்துக்கு ' மெட்ராஸ் மேட்னி' என்ற வித்தியாசமான தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் , ரோஷினி ஹரிபிரியன், ஜார்ஜ் மரியான், மதுமிதா, சாம்ஸ், கீதா கைலாசம், பானுப்பிரியா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஜூன் மாதம் படம் ரிலீஸ் ஆக உள்ளது. அறிவியல் சார்ந்த புனைக்கதைகள் எழுதும் எழுத்தாளராக சத்யராஜ் வருகிறார்.
இந்த மாதம் மெட்ராஸ் மேட்னி வெளியாகும் என்று முன்பு அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், மே மாதம் ஏகப்பட்ட படங்கள் வருவதால் அடுத்த மாதத்துக்கு படம் தள்ளிப்போய் உள்ளது. அருவி, ஜோக்கர், கைதி படங்களை தயாரித்த, ட்ரீம்வாரியர் படத்தை வெளியிடுகிறது. கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் ஆக நடித்து போரடித்துவிட்டு, மீண்டும் வில்லன் வேடத்தில் நடிக்க விரும்புகிறேன் என சொல்லி, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய சிக்கந்தர் இந்தி படத்தில் வில்லனாக நடித்தார் சத்யராஜ். அந்த படம் தோல்வியை தழுவ, மீண்டும் தனது பாதையை மாற்றிக் கொண்டு இருக்கிறார் சத்யராஜ்.