'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
1980களில் முன்னணியில் இருந்தவர் நடிகை கவுதமி. சினிமா வாய்ப்புகள் குறைந்ததால் தொலைக்காட்சி தொடர்கள், வெப் சீரீஸ்களில் நடித்து வருகிறார். அவ்வப்போது சில படங்களிலும் நடிக்கிறார். பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து அரசியலிலும் குதித்தார். தற்போது அந்த கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார். அக்கட்சியில் கொள்கை பரப்பு இணை செயலாளராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் சென்னை நீலாங்கரையில் தனக்கு சொந்தமான 9 கோடி மதிப்புள்ள சொத்தை தன்னிடம் பணியாளராக இருந்த அழகப்பன், மோசடி செய்து அபகரித்து விட்டதாகவும், சட்டவிரோதமாக அனுமதி பெற்று கட்டடம் கட்டி வருவதாகவும் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்ற உத்தரவின்படி அந்த இடம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
இந்த நிலையில் தன்னை சிலர் மிரட்டுவதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கவுதமி புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது: எனது நிலத்தில் ஆக்கிரமிப்பு கட்டுமானத்தை இடிப்பதற்காக அதிகாரிகள் சிலர் என்னிடம் 96 ஆயிரம் லஞ்சம் கேட்கிறார்கள்.மேலும், வக்கீல்கள் என்ற போர்வையில் 'வாட்ஸ்-அப்' மூலம் என்னை சிலர் மிரட்டுகிறார்கள். நிலத்தில் உள்ள கட்டுமானத்தை இடிப்பது தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக கூறி போஸ்டர் அனுப்பி மிரட்டுகிறார்கள்.
எனக்கு மிரட்டல் விடுக்கும் அந்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் மூலம் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம், அதனால் எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். என்று புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.