ஆர்த்தி ரவியின் பதிவுக்கு கெனிஷா பதிலடி | மேடம் டுசாட் மியூசியத்தில் மெழுகுச் சிலையுடன் போஸ் கொடுத்த ராம்சரண் | தயாரிப்பாளர் சர்ச்சை முடிந்து சமரசம் : படப்பிடிப்புக்கு திரும்பிய நிவின்பாலி | தேங்காய் பன்னுக்காக அலைந்த எனக்கு சிவப்பு கம்பள வரவேற்பு : கண் கலங்கிய சூரி | சூர்யா மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மம் : கார்த்திக் சுப்பராஜ் பதில் | ரஜினி பெயரும் 'தேவா', தனுஷ் பெயரும் 'தேவா' !! | தமிழ்த் தலைப்புகளை தவிர்க்கும் தமிழ்த் திரையுலகம் | ட்ரைன் : முழு கதையையும் இப்படி சொல்லிட்டீங்களே மிஷ்கின் | விஷால் திடீரென மயங்கியது ஏன்...? | கவலையில் கஜானா படக்குழு : ரிலீஸான படத்தை தள்ளி வைத்தது |
பிரபலங்களின் உருவத்தை அச்சு அசலாக சிலையாக வடிவமைத்து லண்டனில் உள்ள மேடம் டுசாட் அருங்காட்சியத்தில் வைக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தியாவிலிருந்து தென்னிந்திய மற்றும் பாலிவுட் நடிகர்களின் உருவச் சிலைகளும் இதுபோல மேடம் டுசாட் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில் தற்போது லேட்டஸ்டாக நடிகர் ராம்சரணின் மெழுகு சிலையும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு லண்டனில் இதன் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் ராம்சரண் தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டார்.
இதில் என்ன ஆச்சரியம் என்றால் வழக்கமாக இதற்காக போஸ் கொடுக்கும் ஹீரோக்கள் எல்லாம் தனியாகவே தான் போஸ் கொடுத்தார்கள். ஆனால் நடிகர் ராம்சரண் தான் செல்லமாக வளர்க்கும் ரைம் என்கிற நாய்க்குட்டியை மடியில் அமர்த்தியபடி போஸ் கொடுத்திருந்தார். அதேபோலவே அவரது மெழுகுச் சிலையும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராம் சரண் சோபாவில் நாய்க்குட்டியுடன் அமர்ந்திருக்கும் தனது மெழுகு சிலையுடன் அதே போன்ற போஸில் தன்னுடன் அழைத்துச் சென்றிருந்த நாய்க்குட்டியையும் அமர வைத்தபடி ஒரே போல போஸ் கொடுத்தார். இது பார்ப்பதற்கே ரொம்ப க்யூட்டாக இருந்தது. இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.