மார்ஷல் படத்தில் வில்லன் யார்... | கருப்பு படத்தில் நடிக்க மறுத்த சிம்பு.? | ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‛தமா': தீபாவளிக்கு ரிலீசாகிறது | ஒரே மாதத்தில் கோட்டா சீனிவாசராவின் மனைவியும் மறைந்தார்! | சிக்கந்தர் தோல்வி: சல்மான்கான் மீது நேரடியாக குற்றம் சாட்டிய ஏ.ஆர்.முருகதாஸ்! | நெகட்டிவ் விமர்சனங்களால் ‛கூலி' வசூல் பாதிப்பா? திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | ஆபரேஷன் சிந்தூரில் வீர மரணம் அடைந்த முரளி நாயக் வாழ்க்கை சினிமாவாகிறது | அதிக வசூல் இயக்குனர்களில் முதலிடத்தில் லோகேஷ் கனகராஜ் | ஹீரோயின் ஆகும் ஆசை இல்லை: 'கூலி' மோனிகா பிளெஸ்சி | 'கேப்டன் பிரபாகரன்' படத்திற்காக வீரப்பனை சந்தித்தேன்: ஆர்.கே.செல்வமணி |
ராம் சரண் - ஷங்கர் கூட்டணியில் உருவாகி உள்ள பிரமாண்ட படமான 'கேம் சேஞ்சர்' அடுத்த ஆண்டு ஜனவரி 10ம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் படத்தின் டீசர் லக்னோவில் வெளியிடப்பட்டது. ஒரு நிமிடம் 30 வினாடிகள் கொண்ட டீசரில் படத்தின் அரசியல் பின்னணி, கதைக்களத்தின் மையத்தை அறிமுகப்படுத்துவதுடன், படம் பற்றிய ஆவலை அதிகரிக்கிறது. பிரமாண்ட படங்களுக்குப் பெயர் பெற்ற இயக்குநர் ஷங்கரின் முத்திரை, ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது.
ராம் சரண் ஒரு ஐஏஎஸ் அதிகாரி மற்றும் மக்களுக்காக போராடும் இளம் அரசியல் தலைவர் என்ற இரண்டு கேரக்டர்களில் நடித்திருப்பதை அவர்களின் தோற்றத்தை வெளியிட்டு டிரைலர் உறுதி செய்கிறது. எஸ்.திருநாவுக்கரசுவின் ஒளிப்பதிவு, எஸ்.தமனின் இசை கவனிக்க வைக்கிறது. "ஐ ம் அன் பிரடிக்டபிள்" (நான் யூகிக்க முடியாதவன்) என டீசரில் ராம் சரண் சொல்லும் பஞ்ச் டயலாக் மேலும் ஆவலைத் தூண்டுகிறது.
கியாரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, அஞ்சலி, நவீன் சந்திரா, சுனில் மற்றும் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். இளம் அரசியல் தலைவர் அரசியல் களைகளை எடுக்கிறார். ஐஏஎஸ் அதிகாரி, அரசு அதிகாரிகளை களை எடுக்கிறார். இருவருக்கும் என்ன தொடர்பு என்பது மாதிரியான கதை என்பதை டீசர் மூலம் கணிக்க முடிகிறது. லக்னோவில் நடந்த டீசர் வெளியீட்டு விழாவில் ஷங்கர் கலந்து கொள்ளாதது பேசு பொருளாகி இருக்கிறது.