இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

சிவகுமார் நடித்த படங்கள் அனைத்திலும் அவர் மென்மையான கேரக்டர்களிலேயே நடித்தார். புவனா ஒரு கேள்வி குறி, ராம் பரசுராம் மாதிரியான சில படங்களில்தான் அவர் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார். இன்றைக்கு வருகிற பெரும்பாலான படங்களில் ஹீரோ தாதாவாகத்தான் இருக்கிறார்கள். அப்படி சிவகுமார் தாதாவாக நடித்த படம்தான் 'வண்டிச் சக்கரம்'.
மைசூர் மார்க்கெட்டையே ஆட்டிப்படைத்த ஒரு தமிழ் தாதாவின் கதை. காதலுக்காக தன் தாதாயிசத்தை விட்டுவிட்டு சாப்டாக மாறும்போது சந்திக்கும் பிரச்னைகள்தான் படத்தின் திரைக்கதை. இதில் சிவகுமார் ஜோடியாக சரிதா நடித்திருப்பார், வினு சக்ரவர்த்தி வில்லனாக நடித்திருப்பார். இந்த படத்தில்தான் சில்க் ஸ்மிதா அறிமுகமானார். கே.விஜயன் இயக்கிய இந்தப் படம் சிவகுமாரின் கேரியரில் முக்கியமான படமாக அமைந்தது. அப்போதெல்லாம் படங்களின் நீளம் இரண்டே முக்கால் மணி நேரமாக இருந்தபோது 2 மணி நேர படமாக வெளியானது.
இந்த படத்திற்கு பிறகு சிவகுமாரின் சாக்லேட் பாய் இமேஜ் மாறி விதவிதமான கேரக்டர்களில் நடிக்கத் தொடங்கினார்.