மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

10 ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் நடித்தவர் ஸ்வாசிகா. அதன்பிறகு சரியான வாய்ப்புகள் இல்லாமல் போகவே கேரளாவிற்கே சென்று விட்டார். தற்போது 'லப்பர் பந்து' படத்தின் மூலம் ரீ எண்ட்ரி ஆகியிருக்கிறார். இந்த படத்தின் வெற்றி அவருக்கு பல வாய்ப்புகளை கொடுத்திருக்கிறது. அந்த வகையில் அவர் சூரி கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'மாமன்' படத்தில் நடித்துள்ளார். இதில் அவர் சூரியின் அக்காவாக முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். படத்தின் நாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.
இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு ஸ்வாசிகா பேசும்போது, "இந்த திரைப்படத்தில் குடும்பத்தில் உள்ள உறவுகளை அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். படத்தை பார்க்கும் போது எனக்கும் ஒரு சகோதரர் இருக்கிறார். அவரை நாம் தவறவிட்ட தருணங்களை நினைவுபடுத்துகிறது.
தமிழகத்தை போல் தாய்மாமன்களுக்கான கலாசார ரீதியிலான முக்கியத்துவம் கேரளாவில் இல்லை என்றாலும், கேரளாவிலும் தாய் மாமன்கள் இருக்கிறார்கள். அவர்களை பார்த்தால் மனதில் பயம் இருக்கும். மரியாதை இருக்கும். எனக்கும் தாய் மாமன் இருக்கிறார். அவர்கள் அனைவருக்கும் இந்த படம் பார்க்கும்போது ஒரு நெருக்கம் ஏற்படும்.
படப்பிடிப்பு நடைபெற்ற நாட்களில் அனைவரும் ஒரு குடும்பம் போல் இருந்து மகிழ்ச்சியுடன் பணியாற்றினோம். 'லப்பர் பந்து' படத்திற்குப் பிறகு 'மாமன்' படத்தில் நடித்திருக்கிறேன். படத்தைப் பற்றிய ரசிகர்களின் கருத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்'' என்றார்.
கேரளாவில் தாய்மாமன்களுக்கான கலாசார உறவு இல்லை என்ற ஸ்வாசிகாவின் கருத்தை கேரள மீடியாக்கள் கடுமையாக விமர்சித்து வருகிறது. அங்குள்ள சமூக வலைதளங்களில் கேரள தாய்மாமன் உறவை பற்றிய தகல்களை வெளியிட்டு ஸ்வாசிகாவை விமர்சித்து வருகிறார்கள்.