டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

குவாண்டம் பிலிம் பேக்டரி என்ற பட நிறுவனம் சார்பில் ஆர்.கே.வித்யாதரன் தயாரித்து, இயக்கியுள்ள படம் 'ஸ்கூல்'. இந்த படத்தில் பூமிகா சாவ்லா, யோகிபாபு, கே.எஸ்.ரவிகுமார் முக்கிய கதாபாதிரத்தில் நடித்திருக்கிறார்கள். நிழல்கள் ரவி, பக்ஸ், சாம்ஸ், பிரியங்கா வெங்கடேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார். ஆதித்யா கோவிந்தராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வருகிற 23ம் தேதி வெளியாகிறது.
படம் பற்றி இயக்குனர் வித்யாதரன் கூறும்போது "இது ஒரு உளவியல் திரில்லர் படம். இன்றைய பள்ளி மாணவ மாணவிகளின் கண்ணோட்டத்தில் சமுதாயத்தில் நடக்கும் கொலை, தற்கொலை, விபத்து, கலவரம் போன்ற பல முக்கியமான கிரைம் சம்பவங்களை பற்றி அலசி ஆராயும் விதமாக விறுவிறுப்பான திரைக்கதையை அமைத்துள்ளோம்.
அதே நேரத்தில் மனித உயிரின் பிரயாணத்தை பற்றியும் ஆவிகள் பிசாசுகள் பற்றிய நம்பிக்கைகள் பற்றியும் மிக தீவிரமாக சொல்கிறோம். மாணவர்களை எளிமையாக பழகி அவர்களை நல்வழிக்கு நடத்திச் சொல்லும் ஆசிரியராக, கதை நாயகனாக யோகி பாபுவும், மாணவ மாணவிகளை உளவியல் ரீதியாக ஆராய்ச்சி செய்யும் ஆசிரியராக பூமிகாவும், ஸ்கூலில் நடக்கும் க்ரைம் சம்பவங்களை இன்வேஸ்டிகேஷன் செய்யும் போலீஸ் ஆபீஸராக கேஎஸ் ரவிக்குமாரும், பள்ளி முதல்வராக பாக்ஸும் நடித்திருக்கிறார்கள்.
கிராபிக்ஸ் காட்சிகள் நிறைந்த இந்த படத்தை இன்றைய இளைய தலைமுறையினருக்கு தேவையான பாடமாக உருவாக்கி இருக்கிறோம்" என்றார்.




