தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
கடந்த வாரத்தில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான படம் 'ரெட்ரோ'. இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று ஓரளவு வசூலை பெற்றுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் அளித்த பேட்டி ஒன்றில் அவரின் அடுத்த படம் குறித்து கூறியதாவது, " 'ரெட்ரோ' படத்திற்கு பிறகு அடுத்த படம் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்திற்கு பின் ஒரு சின்ன படமொன்று பண்ணலாம் என தீர்மானித்தேன். அதற்கான கதை தயாராக இருக்கிறது. அதனை முடித்து திரைப்பட விழாக்களுக்கு எல்லாம் அனுப்பிவிட்டு, ஓர் ஆண்டு கழித்து திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறேன். அந்தப் படத்தின் வசூல் நிலவரம் என்ன என்பது எல்லாம் மனதில் வைக்காமல் எடுக்க திட்டமிட்டு இருக்கிறேன். சின்ன பட்ஜெட், புதுமுக நடிகர் என முடிவு செய்திருக்கிறேன். அந்தக் கதையை பல வெர்ஷன்களில் எழுதி வைத்துள்ளேன். அடுத்து அப்படத்தை பண்ணலாம் என திட்டமிட்டு இருக்கிறேன். ஆனால் இன்னும் முடிவு செய்யவில்லை” என்கிறார் கார்த்திக் சுப்பராஜ்.