விஷ்ணு எடவனை டிக் செய்த விக்ரம் | ஏஐ ஆபத்து, சட்ட நடவடிக்கை தேவை : ஷ்ரத்தா ஸ்ரீநாத். | தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் |
ஆர்ஆர்ஆர் படத்தை அடுத்து தற்போது மகேஷ் பாபு நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. பிரியங்கா சோப்ரா நாயகியாக நடிக்கிறார். சாகசங்கள் கலந்த திரில்லர் கதையில் உருவாகி வரும் இதில் இந்தியானா ஜோன்ஸ் பாணியில் வடிவமைக்கப்பட்ட ஒரு வேடத்தில் நடிக்கிறார் மகேஷ் பாபு.
இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட போது, படத்தில் நடிக்கும் மகேஷ் பாபு உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் அடிக்கடி விடுமுறை எடுக்கக் கூடாது என்று கூறி வந்த ராஜமவுலி, படப்பிடிப்பு தொடங்கிய சில வாரங்களிலேயே ஒரு பிரேக் கொடுத்தார். அதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நடத்தியவர், மீண்டும் தற்போது படக்குழுவுக்கு கோடை விடுமுறை கொடுத்திருக்கிறார்.
இந்த வாரம் இறுதியில் லண்டனில் நடைபெறும் ஆர்ஆர்ஆர் படம் தொடர்பான ஒரு நிகழ்வில் கலந்து கொள்ளப் போகிறார் ராஜமவுலி. அதனால் இந்த மாத இறுதியில் தான் மீண்டும் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளாராம் . அந்த வகையில், புதிய படத்தின் படப்பிடிப்பை தொடங்கிய குறுகிய காலத்திலேயே இரண்டு முறை பிரேக் கொடுத்திருக்கிறார் ராஜமவுலி.