லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
மே 1ம் தேதி வெளியான இரண்டு முக்கிய படங்களாக சூர்யா நடித்த 'ரெட்ரோ', சசிகுமார் நடித்த 'டூரிஸ்ட் பேமிலி' ஆகிய படங்கள் இருந்தன. இந்தப் படங்கள் வெளியாகி இரண்டு வாரங்கள் முடிந்து மூன்றாவது வாரம் ஆரம்பமாகி உள்ளது.
கடந்த வாரம் மே 9ம் தேதி சிறிய பட்ஜெட் படங்கள் நிறையவே வந்தன. இன்று சந்தானம், சூரி, யோகி பாபு கதாநாயகர்களாக நடித்த படங்களும் ஒரே நாளில் வெளிவந்துள்ளன. இவர்களது படங்களில் சந்தானம் நடித்து வெளிவந்த 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' படத்திற்கு ஆன்லைன் தளங்களில் பரவலான வரவேற்பு கிடைத்து டிக்கெட்டுகள் முன்பதிவு ஆகியுள்ளது.
கடந்த வாரம், இன்று வெளியான படங்களையும் சமாளித்து மூன்றாவது வாரத்தைத் தொட்டுள்ள 'டூரிஸ்ட் பேமிலி' படம் தமிழகம் முழுவதும் 200 தியேட்டர்களுக்கு மேல் இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது. அவற்றிற்கான முன்பதிவு பல தியேட்டர்களில் குறிப்பிடும்படி உள்ளது திரையுலகினரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. அதே சமயம் அதனுடன் வெளிவந்த 'ரெட்ரோ' படத்திற்கான தியேட்டர்கள் மிகவும் குறைந்துவிட்டதாம். முன்பதிவும் பெரிதாக நடக்கவில்லை என்பது தியேட்டர் வட்டாரத் தகவல். இந்த வார இறுதியிலும் 'டூரிஸ்ட் பேமிலி' நிறைவான வசூலைத் தரும் என்கிறார்கள்.