ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை | 28 ஆண்டுகளுக்குபின் நடிக்கும் டிஸ்கோ சாந்தி | ரம்யா கிருஷ்ணன், மன்சூர் அலிகான் கேரக்டரில் முதலில் நடித்தவர்கள் : கேப்டன் பிரபாகரன் குறித்து ஆர்.கே.செல்வமணி | கூலி : பெங்களூருவில் அதிகபட்ச கட்டணம் ரூ.2000 | 5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு வரும் மெஹ்ரின் பிரதிஸ்டா | பிளாஷ்பேக்: மங்கம்மாவின் வெற்றியும், தோல்வியும் |
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம்தான் பாடத் திட்டங்களை வரையறை செய்து வருகிறது. சமீபத்தில் 7ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இருந்து முகலாயர்கள், டில்லி சுல்தான்களின் வரலாறு நீக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியது.
இதுகுறித்து மாதவன் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் கூறும்போது "பள்ளியில் வரலாறு படித்தபோது முகலாயர்கள், ஹரப்பா-மொகஞ்சதாரோ நாகரிகங்கள், பிரிட்டிஷ் ஆட்சி, சுதந்திர போராட்டத்தை பற்றி பல அத்தியாயங்கள் இருந்தன. ஆனாலும் சேர, சோழ, பாண்டியர்கள் பற்றி ஒரே ஒரு அத்தியாயமே இருந்தது.
ஆங்கிலேயர்களும், முகலாயர்களும் நம்மை 800 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். ஆனால் சோழ பேரரசு 2,400 ஆண்டுகள் பழமையானது. நமது வரலாற்றின் அந்த பகுதி எங்கே? தமிழ் மன்னர்களின் வீரம் செறிந்த வரலாற்று எங்கே போனது? உலகின் பழமையான மொழியான தமிழ் பற்றி யாருக்கும் தெரியாது. நமது கலாசாரத்தில் மறைந்திருக்கும் அறிவியல் அறிவு தற்போது கேலி செய்யப்பட்டு வருகிறது'', என்று தெரிவித்துள்ளார்.