ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் | மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு | கேரளாவை தொடர்ந்து ஹிந்தியிலும் சென்சார் போர்டு சிக்கலில் ஜானகி டைட்டில் | தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் |
முனி, காளை, பரதேசி போன்ற படங்களில் நடித்தவர் வேதிகா. இப்போதும் தமிழ், கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இவர் மும்பையில் பிறந்து வளர்ந்தவர். ஆனாலும் பழைய தமிழ் பாடல்கள் மீது ஆர்வமாக இருக்கிறார். தன்னை சந்திக்க வரும் தமிழக நண்பர்களிடம் பல பழைய தமிழ் பாடல்களை பாடி அசத்துகிறார். சமீபத்தில் கூட ஒரு நிகழ்ச்சியில் எம்ஜிஆரின் ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் பாடலை பாடினார். இளையராஜாவின் சங்கத்தில் பாடாத கவிதை பாடலை ரசித்து பாடுகிறார்.
இது குறித்து கேட்டால் "எனக்கு பழைய தமிழ் பாடல்கள் மீது தனி காதல் உண்டு, அதை ரசித்து கேட்டு பாடுகிறேன். இதைவிட எனக்கு பெருமை நான் நடித்த காவியத்தலைவன் படத்தில் என் அறிமுக காட்சியில் அருணகிரிநாதர் பாடிய ஏவினை வேல் விழி மாதரை பாடலுக்கு, பரதநாட்டியம் ஆடி நடித்ததுதான். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அந்த பாடலை வாணி ஜெயராம் பாடி இருந்தார். இன்றும் அந்த பாடலை முணுமுணுக்கிறேன். இயக்குனர் வசந்தபாலனுக்கு நன்றி. முனி படத்தில் நான் தான் ஹீரோயின், அந்தபடம் மூலமாகவே தமிழில் ஹாரர், காமெடி ஜானர் உருவானது. அந்த படம் சூப்பர் ஹிட். என்னை லக்கி ஹீரோயின் என லாரன்ஸ் மாஸ்டர் சொல்வார்" என்கிறார்.