‛துப்பாக்கி 2': ஐடியா பகிர்ந்த ஏ.ஆர்.முருகதாஸ் | சிரிக்க முடியாத நகைச்சுவை நடிகர்கள்!: மதுரை முத்து | ‛ஓ.ஜி' படத்திலிருந்து பிரியங்கா மோகன் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது! | ‛திரிஷ்யம் 3' படத்தின் படப்பிடிப்பு எப்போது? புதிய தகவல் இதோ! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் புதிய கூட்டணி! | பராசக்தி படத்தில் இணைந்த அப்பாஸ்! | மீசைய முறுக்கு 2ம் பாகம் உருவாகிறதா? | சரிந்த மார்க்கெட்டை காப்பாற்ற அதிரடி முடிவெடுத்த தாரா | உயர பறந்த 'லிட்டில் விங்ஸ்' : சாதனையை பகிரும் இயக்குநர் நவீன் மு | தோழிகளால் நடிகை ஆனேன்: சுபா சுவாரஸ்யம் |
கோடை விடுமுறை தொடங்கிவிட்டதால் இந்த மாதம் அதிக படங்கள் ரிலீஸ் ஆகின்றன. மே 16ம் தேதி சந்தானம் நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல், சூரி நடித்த மாமன், யோகி பாபு நடித்த ஜோரா கைதட்டுங்க ஆகிய 3 படங்கள், அதாவது 3 காமெடி நடிகர்கள் மோதுவதாக இருந்தன. இப்போது இந்த போட்டியில் வடிவேலும் சேர்ந்துவிட்டார்.
தஹா இயக்கத்தில் முரளி, வடிவேலு நடித்த காமெடி படமான சுந்தரா டிராவல்ஸ் படமும் அன்று ரீ-ரிலீஸ் என்று படத்தின் தயாரிப்பாளர் தங்கராஜ் அறிவித்துள்ளார். 2002ம் வெளியான இந்த படம் அப்போது வடிவேலு காமெடிக்காக பேசப்பட்டது. பெரிய வெற்றி அடைந்தது. இப்போது வடிவேலு நடித்த கேங்கர்ஸ் வெற்றி பெற்றதால் சுந்தரா டிராவல்ஸ் படத்தை புத்தம் புது பொலிவுடன் ரீ ரிலீஸ் செய்கிறார்கள்.