வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஸ்ரீலீலா. தற்போது சிவகார்த்திகேயன், அதர்வா, ஜெயம் ரவி நடிக்கும் 'பராசக்தி' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
எம்பிபிஎஸ் படித்து முடித்த ஸ்ரீலீலா, நடனத்தில் அதிக ஆர்வம் கொண்டவர். சிறு வயதிலிருந்தே பரதநாட்டியம் பயின்றவர். சினிமா மீதுள்ள ஆர்வத்தால் நடிகையானவர். தன்னுடைய 21வது வயதிலேயே, 2022ம் ஆண்டு இரண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
இப்போது மூன்றாவதாக ஒரு குழந்தையைத் தத்தெடுத்துள்ளார். அதுப்பற்றி, “வீட்டிற்குள் மற்றுமொருவர்… இதயங்களின் மீதான படையெடுப்பு... மேலும் மூச்சுத் திணற வைக்கும் மூச்சுத் திணறலுக்கு…,” என அக்குழந்தையை முத்தமிடும் புகைப்படத்தைப் பகிர்ந்து இப்படி பதிவிட்டுள்ளார்.
அவரது இந்த செயலுக்கு ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். சில நடிகைகள் மட்டுமே சினிமாவைத் தவிர்த்து சமூக சேவைகளிலும் ஆர்வமாக இருந்து சில நல்லவற்றைச் செய்து வருகிறார்கள்.