தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
நடிகர் விஜய்யின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகரும், தாயார் ஷோபாவும் 1973ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். அந்த வகையில் நேற்று அவர்கள் தங்களது 52வது திருமண நாளை கொண்டாடி உள்ளார்கள். அதோடு தனது மனைவிக்கு பி எம் டபிள்யூ சொகுசு காரை பரிசாக அளித்திருக்கிறார் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர். அதுகுறித்த வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அதையடுத்து அவர் வெளியிட்டுள்ள இன்னொரு வீடியோவில், ''எங்களுக்கு திருமணமாகி 52 வருடங்கள் ஆகிவிட்டது. இந்த காலகட்டத்தில் எத்தனையோ பிரச்னைகள், டார்ச்சர்களை நான் கொடுத்து இருக்கிறேன். அத்தனையும் தாங்கிக் கொண்டு என் மனைவி என்னோடு வாழ்ந்திருக்கிறார். அதுவும் சந்தோசமாக. அதை நினைக்கும் போது ரொம்ப பெருமையாக உள்ளது. 52 வருட காலம் என்னோடு வாழ்ந்த என் மனைவிக்கு இன்று பி எம் டபிள்யூ காரை பரிசாக கொடுப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்று தெரிவித்திருக்கிறார் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர். அதோடு தங்களது திருமணம் நடைபெற்ற போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
![]() |