'ஸ்கூல் கட்' அடித்து 'பாட்ஷா' பார்த்த பஹத் பாசில் | 'தலைவன் தலைவி' தெலுங்கு ரிலீஸ் : ஆகஸ்ட் 1க்கு தள்ளி வைப்பு | 250 கோடி வசூலைக் கடந்த 'சாயரா' | வார் 2 டிரைலர் : 24 மணி நேரத்தில் 50 மில்லியன் பார்வைகள் | 'ரட்சகன்' பார்த்து நாகார்ஜுனா ரசிகரான லோகேஷ் கனகராஜ் | ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை | ‛விஸ்வாம்பரா' படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மவுனி ராய் | கதையில் சமரசம் செய்யாத ராஜமவுலி : பிருத்விராஜ் வெளியிட்ட தகவல் | டியூட் படத்தில் சிவகார்த்திகேயனா? வைரலாகும் வீடியோ |
சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்த பாண்டியநாடு படத்தின் மூலம் மிரட்டலான வில்லனாக அறிமுகமானவர் நடிகர் சரத் லோகிதஸ்வா. வில்லனாக மட்டுமின்றி குணச்சித்திர நடிகராகவும் பல படங்களில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள இவர், கடந்த வருடம் துளு மொழியில் வெளியாகி பல சர்வதேச விருதுகளை பெற்ற 'பிடாயி' என்கிற படத்தில் ஒரு சாமியாடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சரத் லோகிதஸ்வா. அதாவது கிராமத்தில் அம்மனிடம் இருந்து குறி கேட்பவர்களுக்கு அவரின் அருள் பெற்று குறி சொல்லும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த கதாபாத்திரத்தில் நடித்த அனுபவம் குறித்து அவர் கூறும்போது, “இந்த படத்தில் இதுவரை நடித்திராத ஒரு கதாபாத்திரத்தில் நடித்தேன். நம் வீட்டில் கடவுள் பற்றி ஒரு நம்பிக்கை இருக்கும். கிராமத்தைப் பொறுத்தவரை ஒரு நம்பிக்கை இருக்கும். அப்படி ஒரு காட்சியில் அம்மன் அருள் என் மீது வந்து இறங்குவது போன்று நடிக்க வேண்டும். நாம் என்னதான் கடவுள் நம்பிக்கை குறித்து சில விஷயங்களை லாஜிக்காக கேள்வி எழுப்பினாலும் அந்த காட்சியில் நடிக்கும்போது என்னை அறியாமலேயே எனக்குள் ஒரு பரவசம் பட்டதை உணர்ந்தேன். அது காட்சியிலும் வெளிப்பட்டது. நல்ல வேலையாக இயக்குனர் அதை சரியான முறையில் படமாக்கி என்னை அமைதிப்படுத்தினார்.
இப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் வருடத்திற்கு ஒரு படம் நடித்தாலும் கூட என் மனதிற்கு திருப்தி. பலர் நினைப்பது போல நான் ஒன்றும் அதிக சம்பளம் கேட்பவனோ அல்லது அணுக முடியாதவனோ அல்ல.. நல்ல கதையுடன் யார் வேண்டுமானாலும் என்னை அணுகலாம்” என்று கூறியுள்ளார்.