அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் | 10 மில்லியன் வியூஸ் - தமன்னா சாதனையை முறியடிப்பாரா பூஜா ஹெக்டே | விக்னேஷ் சிவனை பிரிவதாக வதந்தி : போட்டோவால் பதில் சொன்ன நயன்தாரா | தமிழில் மீண்டும் நடிக்கும் அன்னா பென் | சூர்யா சேதுபதியின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் : அனல் அரசு வேண்டுகோள் | பிளாஷ்பேக் : நயன்தாராவை கவர்ச்சி களத்தில் தள்ளிய 'கள்வனின் காதலி' | 'பெத்தி' படத்தில் சிவராஜ் குமார் முதல் பார்வை வெளியீடு | ‛பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீ மேக்கான ‛தடக் 2' டிரைலர் வெளியீடு, ஆக., 1ல் ரிலீஸ் | சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? |
‛தசரா' பட இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடிலா இயக்கத்தில் 'தி பாரடைஸ்' என்ற படத்தில் நானி நடித்து வருகிறார். ஸ்ரீலஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். ஏற்கனவே இதன் முன்னோட்ட வீடியோ வெளியாகி வரவேற்பு பெற்றது. இதில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.
இந்த படத்தில் நானி உடன் இணைந்து நடித்து வருபவர்கள் குறித்த தகவல்களை மிகவும் ரகசியமாக படக்குழு வைத்துள்ளனர். இந்த நிலையில் இப்படத்தில் வில்லனாக 'கில்' படத்தில் நடித்து பிரபலமான ராகவ் ஜூயல் நடிக்கவுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.
இவர் 'கில்' படத்தில் வில்லனாக நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் நடிக்கும் முதல் தென்னிந்திய படமாக 'தி பாரடைஸ்' அமைந்திருக்கிறது. அவரது படப்பிடிப்பு காட்சிகள் விரைவில் தொடங்கவுள்ளது. தற்போது 'தி பாரடைஸ்' படத்துக்காக உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட அரங்கில் நானி சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகின்றனர்.