பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
‛மகாராஜா' படத்தை அடுத்து விஜய் சேதுபதி தற்போது ஏற்கனவே அவரை வைத்து ‛ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' என்ற படத்தை இயக்கிய ஆறுமுக குமார் இயக்கத்தில் அவரது 51வது படமாக 'ஏஸ்' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ருக்மினி வசந்த் மற்றும் திவ்யா பிள்ளை, ராஜ்குமார் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பை மலேசியாவில் நடத்தினர். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து பல மாதங்கள் ஆகி இதன் டிஜிட்டல் உரிமம் வியாபாரம் ஆகாமல் நிலுவையில் இருந்தது. இப்போது இத்திரைப்படம் வருகின்ற மே 23ம் தேதி அன்று திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர்.