விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
அஜித் குமார் நடித்து திரையரங்குகளில் வசூலை குவித்து வரும் படம் குட் பேட் அக்லி. தமிழகத்தில் மட்டும் இந்த திரைப்படம் இதுவரை கிட்டத்தட்ட 120 கோடிக்கு மேல் வசூலித்ததாக செய்திகள் வந்துள்ளது. மேலும் இந்த திரைப்படம் பல கோடிகளை கடந்து வசூல் செய்யும் என்பதே பல விநியோகஸ்தர்களின் கருத்தாக நிலவுகிறது.
திரையரங்கில் வசூலை குவித்து வருவது ஒரு பக்கம் இருந்தாலும் இந்த திரைப்படம் ஓடிடி தளத்தில் எப்போது வெளியாகும் என்பதே பலரின் பார்வையாக இருக்கிறது. அந்த வகையில் நாம் விசாரித்த தகவலின்படி குட் பேட் அக்லி திரைப்படம் மே 09 அல்லது 10 அன்று வெளியாகுமென்று நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து செய்திகள் கசிந்துள்ளது.
குட் பேட் அக்லி திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் சுமார் 90 கோடிக்கு உரிமையை பெற்றுள்ளது. திரையரங்கில் எப்படி மாபெரும் வெற்றி பெற்றதோ அதேபோல் ஓடிடி தளத்திலும் மாபெரும் வெற்றி பெரும் என்பதே பார்வையாளர்களின் கருத்தாக நிலவுகிறது.