உணவு கூட தராமல் கொடுமைப்படுத்தினர் : விஷால் பட ஹீரோயின் மீது பணிப்பெண் பரபரப்பு புகார் | கேமரா என்னை அழைக்கிறது : படப்பிடிப்புக்கு திரும்பினார் மம்முட்டி | பிளாஷ்பேக் : நிஜமான குத்துச்சண்டை காட்சி இணைக்கப்பட்ட படம் | காந்தாரா சாப்டர் 1 : முதல் நாளில் 100 கோடியை கடக்குமா? | லண்டனில் மாஸ்டர் டிகிரியை முடித்த திரிஷ்யம் சின்னப்பொண்ணு | என் மூளையில் இருந்து லோகா கதையை திருடி விட்டார்கள் : இயக்குனர் வினயன் | காந்தார சாப்டர் 1ல் நடித்தது பெருமை : சம்பத் ராம் | இளையராஜா பேரன் யதீஷ்வரின் இசை ஆல்பம் : ரஜினி, கமல் வெளியிட்டனர் | மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் |
தமிழ் சினிமாவில் தமிழ் படங்களை பொறுத்தவரை ஒரு திரைப்படம் வெளியாகி 4 வாரங்கள் கழித்து ஓடிடி தளங்களில் வெளியாவதே இப்போது வழக்கமாக உள்ளது. ஆனால் வட இந்திய படங்களை பொறுத்தவரை 8 வாரங்களுக்கு பிறகு தான் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள் மட்டுமே திரையிடப்படும் என்ற நிபந்தனை உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள திரையரங்க உரிமையாளர்களுக்கு 4 வாரத்திலே படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாவதால் திரையரங்குகளில் வரும் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது.
இது சம்பந்தமாக பலமுறை தயாரிப்பு நிறுவனங்களுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தே வந்தது. இதுவரை எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் சமீபத்தில் இது சம்பந்தமாக தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் ஒரு சிறப்பு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் இனிமேல் 8 வாரங்கள் கழித்து ஓடிடி தளங்களில் வெளியாகும் தமிழ் திரைப்படங்கள் மட்டுமே இனிமேல் திரையரங்கில் வெளியாகும் என்று திரையரங்க உரிமையாளர்கள் கூறியதாகவும், இந்த நடைமுறை வருகிற ஜூன் மாதம் முதல் நடைமுறையில் வரவேண்டும் என்றும் தயாரிப்பாளர்களுக்கு திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை வைத்ததாக சொல்லப்படுகிறது.
இந்த பேச்சு வார்த்தையில் தயாரிப்பாளர்கள் 5 நாட்கள் கால அவகாசம் கேட்டதாகவும், மேற்படி என்ன செய்யலாம் என்ற யோசனையில் தயாரிப்பாளர்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. விரைவில் சுமூகமான முடிவு எட்டப்படமா, இதேபோல் இன்னும் இழுபறி நீடிக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்த சூழ்நிலையால் திரையரங்க உரிமையாளர்களுக்கு சுமூகமான முடிவு வந்தால் ஓடிடி நிறுவனங்களுக்கு விற்கும் படங்களின் உரிமை தொகை என்னவாகும், 8 வாரங்கள் கழித்து வெளியானால் பார்வையாளர்களை ஈர்க்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.