அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
விஜய் டிவியில் ஹிட்டான சீரியல்களில் ஒன்றான 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் முல்லை எனும் கதாபாத்திரத்தில் விஜே சித்ரா நடித்து பிரபலமானார். அவர் திடீரென தற்கொலை செய்து கொண்ட நிலையில், சீரியலின் 2ம் பாகத்தில் முல்லை கதாபாத்திரத்தில் காவ்யா அறிவுமணி நடித்து வந்தார். பின்னர் சீரியலில் இருந்து சினிமா வாய்ப்பை பெற்ற காவ்யா, 2022ல் 'மிரள்', 2023ல் 'ரிப்பப்பரி' ஆகிய படங்களில் நடித்து அசத்தினார்.
தற்போது நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி நட்ராஜ் நடித்த 'நிறம் மாறும் உலகில்' படத்திலும் நடித்தார். அடுத்ததாக கவின் - நயன்தாரா நடிக்கும் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். அப்படம் பற்றி அவர் கூறியதாவது: இந்தப் படம் இளைஞர்களை இணைக்கும் வகையிலான கதையை கொண்டது. சீரியலில் நடித்துவந்தபோதே கவினை தெரியும். அவருடன் பணிபுரிவது கலகலப்பாக இருக்கும்.
நான் நயன்தாரா உடன் நடிக்க வேண்டும் என்று ஒருபோதும் கனவு கண்டதில்லை. அவருடன் நடிப்பதை ஒரு ஆசீர்வாதமாகக் கருதுகிறேன். அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள விரும்புகிறேன். படப்பிடிப்பு தளத்திற்கு வருவதும், தொழில்ரீதியாக வேலை செய்வதும் என இருக்கிறார். வேறு எந்த விஷயத்திலும் அவர் தலையிடுவதில்லை.
என் பள்ளி மேடை நாடகங்களில் நான் மோனோ நடிப்பு செய்து வந்தேன். அப்போது பலரும் என்னிடம் வந்து, 'நீ ஏன் நடிப்பை தொடரக்கூடாது' என கேட்பார்கள். சினிமா பின்னணி இல்லாமல், சென்னைக்கு தனியாக வந்தேன், நிறைய முயற்சித்தேன். சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு யூடியூப்பில் சில குறும்பட வாய்ப்புகள் கிடைத்தன. அதன்பிறகு, 'பாரதி கண்ணம்மா' சீரியலில் வாய்ப்பு கிடைத்தது, பின்னர் பாண்டியன் ஸ்டோர்ஸில் முக்கிய வேடத்தில் நடித்தேன்.
சீரியல்களில் நடிக்கும் போது பட வாய்ப்புகள் கிடைத்தன, ஆனால் தேதி பிரச்னைகள் காரணமாக அவற்றை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்போது ரிஸ்க் எடுத்து சீரியலில் இருந்து விலகவில்லை என்றால் ஒரு பெட்டிக்குள் சிக்கிக்கொள்வது போல் ஆகிவிடும் என எண்ணி, சீரியிலில் விலகி சினிமாவில் எண்ட்ரி ஆனேன். டிவி தொடர்களில் இருந்து திரைப்படங்களுக்கு மாறுவது எளிதானது அல்ல, ஏனெனில் நீங்கள் பொருளாதார ரீதியாக நிறைய போராட்டங்களைச் சந்திப்பீர்கள். படங்களில் நடிக்க, நாம் நம்மை நாமே தயார்படுத்திக் கொள்ள வேண்டும், அதற்கு நமக்கு பணம் தேவை. சீரியலில் நடிக்கும்போது கொஞ்சம் பணத்தைச் சேமித்து வைத்திருந்தேன், அதன் மூலம் என்னை நானே வளர்த்துக் கொண்டேன். இவ்வாறு அவர் கூறினார்.