பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு | 'காந்தாரா சாப்டர் 1' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | இல்லாத இடத்தை குறிப்பிட்டு விளம்பரம் நடித்து சிக்கலில் சிக்கிய நடிகர் மகேஷ்பாபுவுக்கு நோட்டீஸ் | கில்லர் படத்திற்காக 4வது முறையாக இணைந்த எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான் | லிஜோவின் அப்பாவித்தனம் அவரை நாயகியாக்கியது: 'பிரீடம்' இயக்குனர் சத்யசிவா | பிளாஷ்பேக் : ஒரே படத்துடன் தமிழில் மூட்டை கட்டிய காஜல் | பிளாஷ்பேக்: அப்பாவின் நண்பருக்காக மேடையில் ஆடிய சிறுவன் கமல் | ‛3BHK' படத்தின் மூன்று நாள் வசூல் வெளியானது | அஜித் தோவல் வேடத்தில் மாதவன் |
கடந்த மாதத்தில் திரைக்கு வந்த ‛மர்மர்' என்ற ஹாரர் படத்தில் நாயகனாக நடித்தவர் தேவ்ராஜ். இந்த படத்துக்கு பிறகு இரண்டு புதிய படங்களில் கமிட்டாகி இருப்பதாக கூறும் தேவ்ராஜ், இந்த இரண்டு படங்களிலுமே ரொமான்டிக் கலந்த காமெடி கதைகளில் நடிக்கப் போவதாக கூறுகிறார். மேலும், ‛‛தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், சத்யராஜ் என அனைவருமே என்னை வெகுவாக கவர்ந்த நடிகர்கள்தான். இவர்களில் சத்யராஜை நான் பெரிய அளவில் ரசித்துள்ளேன். குறிப்பாக நெகட்டீவ் கலந்த ஹீரோவாக அவர் நடித்த படங்களை விரும்பி பார்ப்பேன். அதன் காரணமாகவே மலேசிய தமிழில் உருவான ‛தனுஷ்' என்ற ஒரு படத்தில் வில்லனாக நடித்தேன்.
அந்த வகையில் சினிமாவை பொறுத்தவரை சத்யராஜ்தான் என்னுடைய ரோல் மாடலாக இருக்கிறார். அதனால் எதிர்காலத்தில் நெகட்டீவ் கலந்த ஹீரோ கதைகளை அதிகமாக தேர்வு செய்து நடிப்பேன். அதோடு வில்லேஜ் கதைகளில் நடிப்பதிலும் எனக்கு அதிக ஆர்வம் உள்ளது'' என்று கூறும் தேவ்ராஜ், ‛‛சத்யராஜ் என்னை கவர்ந்த நடிகர் என்றாலும் நடிப்பில் அவரது பாணியை பின்பற்றாமல் எனக்கென்று ஒரு தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்துவேன். எனது தனித்திறமையை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் ஒரு நிரந்தரமான இடத்தை பிடிப்பேன். தற்போது மர்மர் படத்தில் எனது நடிப்புக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது.
படத்தை பார்த்த ரசிகர்கள் என்னை தொடர்பு கொண்டு பாராட்டியது உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. அதனால் அடுத்து நடிக்க போகும் புதிய படங்களில் இன்னும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் நிரந்தர இடத்தை பிடிப்பேன். ஏற்கனவே சில படங்கள், சீரியல்களில் சிறிய வேடங்களில் நடித்திருக்கிறேன். என்றாலும் இனிமேல் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன்'' என்கிறார்.