ரஜினி படத்தை தயாரிக்கும் கமல்: சுந்தர் சி இயக்குகிறார் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | 'பராசக்தி' படம் என் மீதான கவர்ச்சி பிம்பத்தை மாற்றும்! -ஸ்ரீ லீலா நம்பிக்கை | ஸ்ரீகாந்த், ஷ்யாம் நடிப்பில் தி ட்ரெய்னர் | 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு' படப்பிடிப்பு தொடங்கியது | வெப் தொடரான கார்கில் போர் | ஹாலிவுட் நடிகை டயான் லாட் காலமானார் | இயக்குனராக புதிய பிறப்பு கொடுத்தவர் நாகார்ஜுனா : ராம்கோபால் வர்மா நெகிழ்ச்சி | என்னுடைய தொடர் வெற்றிக்கு இதுதான் காரணம்: விஷ்ணு விஷால் | மணிரத்னம் படத்தில் நடிப்பது பெரிய ஆசீர்வாதம்: பிரியாமணி | கேரள அரசு விருது குழுவின் தலைமையை கடுமையாக விமர்சித்த மாளிகைப்புரம் சிறுமி |

சிவகுமார் போன்று பெரிய நடிகராக வேண்டும் என்று கொங்கு மண்டலத்தில் இருந்து வந்தவர் சத்யராஜ். சிவகுமாரின் உறவினரும்கூட. ஆரம்பத்தில் சிவகுமாரின் சிபாரிசில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த சத்யராஜ், பின்னர் வில்லன் வேடங்களில் தனி முத்திரை பதித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
வில்லனாகவே நடித்து வந்த அவரை ஹீரோவாக்கிய படம் 'சாவி'. கார்த்திக் ரகுநாத் என்பவர் இயக்கிய இந்த படம் 'டயல் ய மர்டர்' என்ற அமெரிக்க படத்தின் தழுவல். இந்த கிரைம் திரில்லர் படத்தில் சத்யராஜுடன் சரிதா, ஜெய்சங்கர், நிழல்கள் ரவி, கவுண்டமணி, அனுராதா, டிஸ்கோ சாந்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள், கங்கை அமரன் இசை அமைத்திருந்தார்.
முன்னாள் டென்னிஸ் வீரரான சத்யராஜ், சமூக ஆர்வலரும், பணக்கார பெண்ணுமான சரிதாவை காதலித்து திருமணம் செய்கிறார். ஆனால் சரிதா சகஜமாக எல்லா ஆண்களுடன் பழகுகிறவர் என்பதால் அவர்களில் யாராவது ஒருவர் மீது சரிதாவுக்கு காதல் வந்து விட்டால் என்ன ஆகும் என சந்தேகம் கொள்ளும் சத்யராஜ், சரிதாவுடன் நெருங்கி பழகும் ஆண்களை பழி வாங்குவது மாதிரியான கதை. படம் ஓரளவிற்கான வரவேற்பை பெற்றது. சத்யராஜின் நடிப்பு பேசப்பட்டது. அதன்பிறகு தொடர்ச்சியாக ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார்.