இயக்குனருக்கு தெரிவிக்காமலேயே ரீ ரிலீஸுக்கு தயாராகி வரும் மம்முட்டியின் 'சாம்ராஜ்யம்' | ஹேக் செய்யப்பட்ட மொபைல் போன்கள் ; உபேந்திரா-பிரியங்கா தம்பதி விடுத்த எச்சரிக்கை | பிரதமர் மோடிக்கு, ரஜினி, கமல், இளையராஜா பிறந்தநாள் வாழ்த்து | 'காந்தாரா சாப்டர் 1' டப்பிங்கை முடித்த ருக்மிணி வசந்த் | 'கூலி' பைனல் வசூல் அறிவிக்கப்படுமா ?, ரசிகர்கள் எதிர்பார்ப்பு | காதலுக்காக பாலினத்தை மாற்றும் ஜோடி: 'சரீரம்' படக்கதை இதுதான் | தமிழில் ரீமேக் ஆன ஸ்ரீலீலா படம்; செப்.,26ல் ரிலீஸ் | கர்நாடக அரசை எதிர்த்து மல்டிபிளக்ஸ் சங்கம் வழக்கு | நாயகியான நாடக நடிகை திரிப்தி | பிளாஷ்பேக்: சிந்து பைரவிக்கு 40 வயது |
புகழ்பெற்ற தெலுங்கு நாடகம் 'என்ஜிஓ'. ஆந்திரா முழுவதும் பரவலாக நடத்தப்பட்டு வந்த நாடகம். நடுத்தர வர்க்கத்தின் பிரச்னைகளை பேசியதால் நாடகத்திற்கு பெரிய வரவேற்பு இருந்து. குமாஸ்தாவாக பணியாற்றும் ஒருவர் தனது பெரிய குடும்பத்தை காப்பாற்ற போராடுவதுதான் நாடகத்தின் கதை. ஆச்சார்யா ஆத்ரேயா என்பவர் இந்த நாடகத்தை எழுதினார்.
இந்த நாடகம், 'குமாஸ்தா' என்ற பெயரில் தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் சினிமா ஆனது. குமாஸ்தாவாக சித்தூர் நாகைய்யா நடித்தார், அவரது மனைவியாக ஜெயம்மா நடித்தார், தங்கையாக பண்டரிபாய் நடித்தார், வில்லனாக நரசிம்ம பாரதி நடித்தார்.
ஆர்.எம்.கிருஷ்ணசாமி இயக்கிய இந்த படத்திற்கு சி.என்.பாண்டுரங்கன், ஜி.ராமநாதன், நாகய்யா ஆகிய மூவரும் இசை அமைத்தார்கள். இயக்குனரே ஒளிப்பதிவாளராகவும் இருந்தார். தமிழில் தோல்வி அடைந்த இந்த படம் தெலுங்கில் ஓரளவிற்கான வரவேற்பை பெற்றது. நாடகம் போன்று படம் இல்லை என்ற விமர்சனமும் வந்தது.