குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
சங்க காலத்தில் தமிழ் பெண்கள் அறிவியலிலும் ஆற்றலிலும் வீரத்திலும் சிறந்து விளங்கியதற்கு பல சான்றுகள் உள்ளன. சங்ககால பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை 477 பேர். அதில் 30 பேர் பெண்பால் புலவர்கள். பழக்க வழக்கங்களும் பண்பாட்டுக் கோட்பாடுகளும் நல் ஒழுக்கங்களை இலக்கியங்கள் கூறுகிறது.
அச்சம், நாணம், மடம் ஆகிய மூன்றும் நெடுங்காலமாகவே பெண்களுக்குரிய நல் ஒழுக்கங்களாக கருதப்படுகின்றன. அச்சம் நாணம் மடம் ஆகிய மூன்றை போல் கற்பு என்ற ஒழுக்கமும், ஒரு பெண்ணுக்கு இன்றியமையாதது என்று உயிரை விட சிறந்தது நாணம், நாணத்தை விட சிறந்தது கற்பு என்று இலக்கியங்கள் கூறுகின்றன. ஆனால் காசு என்று வரும்போது கற்பு காணாமல் போய் விடும் போல. பொய்யான கேவலமான வாக்குறுதிகளை நம்பி செய்யும் செயல்கள் எதுவாக இருந்தாலும் அது கேடில் தான் போய் முடியும்.
அண்ணன பார்த்தியா, அப்பாத்தி கேகே-ன்னா என்று திடீரென டிரெண்டான தாய்லாந்து பாடலை விட, இரண்டு வீடியோக்கள் இங்கே தமிழ் திரை உலகில் வேகமாக பரவி வருகிறது. காரணம், ஒரு பெண்ணின் சினிமா மோகம். வாய்ப்புக்காக எல்லை கடந்து சென்ற சோகம் .
யார் இந்த சுருதி...
24 வயது நிரம்பிய நடிகை சுருதி நாராயணன் ஆரம்ப காலகட்டத்தில் குறும்படங்கள் மற்றும் விளம்பரங்களில் தலை காட்டியவர். நடிப்பில் தீவிர ஆசை வந்து சிறகடிக்க ஆசை என்ற விஜய் டிவி சீரியலில் தலை காட்டத் துவங்கினார். கிட்டத்தட்ட 650 எபிசோடுகளை தாண்டி செல்கிறது இந்த சீரியல். வித்யா கதாபாத்திரத்தில் எல்லாருக்கும் தெரிந்த நடிகையானார் , கார்த்திகை தீபம், மாரி போன்ற தொடர்களிலும் இவர் நடிப்பு பேசப்பட்டது.
கேவலமான ஆடிசன்
தமிழ் சினிமாவில் இப்படி ஒரு ஆடிசன் நடந்ததில்லை நடந்திருக்கவும் முடியாது என்ற அளவுக்கு சில கேவலமான காமத்தின் உச்சத்தில், அருவருக்க தக்க வீடியோ பதிவுகள் வெளியானது. அந்த வீடியோவை பார்க்க போட்டி போட்டுக் கொண்டு காலில் விழுந்து கெஞ்சாத குறையாக, அந்த வீடியோவை பகிர சொல்லி , சமூக வலைதளங்களில் பலர் ஆர்வம் காட்டினர்.. இவ்வளவுக்கும் அந்த நபர் இயக்குனர் இல்லை நடிகர்களை அந்த கதாபாத்திரத்தில் தேர்வு செய்யும் காஸ்டிங் டைரக்டர் என்று சொல்லக்கூடிய உதவியாளர் மட்டுமே..
கேவலமான ஆசையில், யாரையோ நம்பி செய்த செயல் இன்று உலகம் முழுக்க பரவி வருகிறது. கற்பு என்பது ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும் மனிதன் தனக்குத்தானே வகுத்துக் கொண்ட எல்லை, கற்பு என்பது சொல் பிறழாமை. .கொடுத்த வாக்கை காப்பாற்றவே என்கிறார் ஒளவை..
சட்ட நடவடிக்கை எடுக்காதது ஏன்
முன்பெல்லாம் கதா நாயகிகள் 10, பேர் 20 பேர் இருந்தனர், அவர்களுக்குள் பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் தற்போது, பல நடிகைகள் வந்து கொண்டு இருக்கின்றனர். போட்டிகளை சமாளிக்க, வாய்ப்பை பெற இப்படி இறங்கி செயல்பட்டு அசிங்க பட வேண்டிய நிலை. முதல் வீடியோ, 2ம் வீடியோ என்று வரிசை கட்டி நிற்கிறது . முதலில் AI மூலம் யாரோ உள்ளனர். நான் இல்லை என்றார், பிறகு, எல்லாரும் ஏதோ பேசுகிறார்கள், பெண்கள் வாழ்வை சீரழிக்கும் அந்த நபர் குறித்து ஏன் யாரும் கேள்வி கேட்கவில்லை என்கிறார். அந்த வீடியோவை வெளியிட்ட அந்த நபரை, நீங்கள் ஏன் வெளியில் தெரியப்படுத்தாமல் இருக்கிறீர்கள். குறைந்த பட்சம் ஏன் காவல் துறைக்கு செல்ல வில்லை?. மேலும் எந்தெந்த பிரிவில் தண்டனை என்று வழக்குகள் பற்றி எல்லாம் பேசுகிறார் சுருதி.
பிச்சை கூட எடுப்பேன்
இந்த வீடியோ வெளியானது பற்றி மூத்த நடிகை ஒருவரிடம் கேட்ட போது, ‛‛நான் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டேன். என் வாழ்க்கை சரியாக அமையவில்லை. ஆனாலும் பிச்சை எடுத்து கூட என் மகனை படிக்க வைப்பேன் ஒரு நாளும் எவனுக்கும் அட்ஜெஸ்ட் செய்ய மாட்டேன். அப்படி ஒரு பட வாய்ப்பு எனக்கு வேண்டாம் என்று இப்போது வரை இருக்கேன். என் மகனும் 10வது வகுப்பு வந்து விட்டான். இப்போது நடிக்க வரும் பெண்கள் உடனே பட வாய்ப்பு வந்துரணும், வீடு வாங்கணும் , கார் வாங்கணும் செட்டில் ஆகணும் அப்படிங்கற ஒரு பெரிய பெரிய ஆசையோடு தான் வராங்க. யாரையாச்சும் நம்பி, ஏதாச்சும் பண்ணிட்டு தைரியமா வெளில வேற பேசுறாங்க. இப்படி ஒரு வீடியோ என்னோடது வந்திருந்தால், என் அப்பா அம்மா என்னை கொன்று இருப்பார்கள்'' என்கிறார்.
வாய்ப்புக்காக இப்படியா...
நமக்கு இருக்கும் வருத்தம் எல்லாம் படித்த பெண்கள் இப்படி நடந்து கொள்வது எவ்வளவு மோசமான செயல். வாய்ப்பு தருவதை நம்பி எதிரில் இருக்கும் அயோக்கியன் ஒருவன் தன் இச்சைகளுக்கு ஒரு பெண்ணை எப்படி எல்லாம் பேசி அவளை கீழ்தரமாக நடத்தி, அத்தனை அசிங்கத்தை செய்த நடிகையால் எப்படி இனி வெளியில் தலைகாட்ட முடியும். நடித்த தொடரில் இருந்தும் நீக்கியதாக செய்திகள் வருகின்றன. தன் மகளை நம்பி, மகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்து வளர்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் இவரை எப்படி பார்ப்பார்கள். அக்கம் பக்கத்தினர் நண்பர்கள் கேலிகளுக்கு என்ன பதில் இவரிடம். சராசரி பெண்ணாக இவ்வளவு சங்கடங்களை கடந்து எப்படி எதிர்கால வாழ்வை சந்திப்பார் என்றுதான்.
சரி இந்த விஷயத்தில் நடிகையை மட்டும் குற்றம் சொல்ல முடியுமா. சினிமா கனவோடு வரும் பெண்களுக்கு இப்படி தான் ஆடிசன் நடத்துவார்களா. நடிகையின் நடிப்பு திறனை பார்க்காமல் அவரின் ஆடையை அவிழ்க்க சொல்லி பார்ப்பது எவ்வளவு கேவலமான விஷயம். அதிலும் அவர்கள் பேசிய வார்த்தைகள் எல்லாம் நாராசம்.
கண்டுகொள்ளாத சினிமா சங்கங்கள்
சக நடிகைக்கு இப்படியொரு நிகழ்வு நடந்துள்ளது. இதை யாரும் கண்டிக்கவில்லை. சிறகடிக்க ஆசை தொடரில் நடித்த ஸ்ரீதேவா, நடிகைகள் சனம் ஷெட்டி, சர்மிளா, பாடகி சின்மயி போன்ற ஒரு சிலர் மட்டுமே இந்த வீடியோ பற்றி பேசி, சினிமா எவ்வளவு மோசமாக உள்ளது என கண்டித்தனர். மற்றபடி எந்த பெரிய நடிகரோ, நடிகையோ வாய் திறக்கவில்லை. எந்த சங்கமும் வாய் திறக்கவில்லை. அப்படியென்றால் இதுபோன்ற சம்பவங்களை சங்கங்களும் மறைமுகமாக ஆதரிக்கிறதா... அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு குரல் கொடுக்காதோ... என்ற சந்தேகமும் எழுகிறது.
சில இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், காஸ்டிங் டைரக்டர்கள் என பலரும் வாய்ப்பு தேடி வருபவர்களை தங்களின் 'தேவைக்கு' பயன்படுத்துவதாக சில நடிகைகள் வெளிப்படையாகவே குற்றம்சாட்டியும் வந்துள்ளனர். அதேப்போல் நிறைய உப்புமா கம்பெனிகள் ஆடிசன் என்ற பெயரில் இதுபோன்ற பெண்களை வரவழைத்து தங்கள் தேவைக்கு பயன்படுத்திவிட்டு ஏமாற்றிவிட்டு போன சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருகின்றன. ஆனால், இதையெல்லாம் திரைப்பட சங்கங்கள் கண்டும் காணாமல் கடந்து செல்கின்றன. வாய்ப்புக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராகும் பெண்களும், அவர்களின் ஆசையை புரிந்துகொண்டு தங்களின் ஆசைக்கு இணங்க வைக்கும் இதுபோல சினிமா துறையை சேர்ந்தவர்களும் என இரு பக்கமும் தவறு இருக்கவே செய்கிறது. இது நிச்சயம் முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டிய ஒன்று. திறமை இருப்பவர்களுக்கு வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும். அது இந்த கேவலமான செயல்களால் தான் கிடைக்கும்பட்சத்தில் துணிச்சலாக துவக்கத்திலேயே எதிர்த்து நிற்கவும் பெண்கள் தயாராக இருக்க வேண்டும்.
சினிமா வெறும் காட்சி பொருள் மட்டும் அல்ல. உங்கள் திறமைகளை வெளிக்காட்டி சவால்கள் பல கடந்து இந்த சமூகத்துக்கு பெண்மையை போற்றும்படி செய்து சாதித்து முன்னேறுங்கள்.