பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
அஜித்குமார் நடித்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் குட் பேட் அக்லி. இந்த படம் வெளியாக இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் படத்தின் மீது எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
ஏற்கனவே படத்தின் டீசர் மற்றும் 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குட் பேட் அக்லி படத்தின் டிக்கெட் முன்பதிவு இன்று இரவு தமிழகம் முழுவதும் தொடங்கப்படுகிறது.
இதனால் டிரைலர் வெளியாகுமா வெளியாகாதா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதேசமயம் டிரைலர் நாளை ஏப்., 05 அன்று வெளியாகும் என தகவல் வந்தது. இந்நிலையில் இன்று(ஏப்., 4) படத்தின் டிரைலர் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதேசமயம் நேரத்தை அவர்கள் குறிப்பிடவில்லை. மாலை 5 அல்லது 6 மணிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.