ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு ரிலீஸ் | சிம்பு படத்துக்கு தயாரிப்பாளர் மாற்றமா? | லடாக்கில் சிக்கித் தவிக்கும் மாதவன் | 'கூலி'க்கு 'யுஏ' சான்று கேட்ட வழக்கு தள்ளுபடி | பிளாஷ்பேக் : விஜயகாந்த் பட தலைப்புக்கு அனுமதி மறுத்த தணிக்கை குழு | பிளாஷ்பேக் : சிவாஜி, பத்மினியை சேர்த்து வைத்த பணம் | என் குழந்தைகளுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் அப்பா : ஜாய் கிரிசில்டா பரபரப்பு புகார் | 50 ஆண்டு சாதனை, ரஜினிக்கு பாராட்டு விழா : விஷால் பேட்டி | 'எல்ஐகே' அல்லது 'டியூட்' : ஏதாவது ஒன்றுதான் தீபாவளி ரிலீஸ் | 'தி ராஜா சாப்' போட்டியை சமாளிக்குமா 'ஜனநாயகன்' |
ஓடிடி தளங்களை பொறுத்தவரை வாரம் வாரம் படங்கள் வெளியாவது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில் பல ஓடிடி தளங்கள் இருந்தாலும் குறிப்பாக நெட்பிளிக்ஸ் தளம் நிறைய படங்களை வெளியிடுகிறது. அந்த வகையில் அனைத்து மொழிகளிலும் சேர்த்து மொத்தம் 7 படம் வெளிவரவுள்ளது.
ஏற்கனவே ஏப்ரல் முதல் வாரத்தில் சில படங்கள் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி ஓடிக்கொண்டுருக்கும் நிலையில் இன்னும் வரும் நாட்களில் சில படங்கள் வெளியாக காத்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் மாதவன், நயன்தாரா நடித்த டெஸ்ட் திரைப்படமும், "குனா குனா இஸ்ட்ரி மூட" என்ற இந்தோனேசியா மொழி திரைப்படமும் இன்று வெளியாகிறது.
அதுமட்டுமில்லாமல் ஜப்பானிய மொழியில் "யாய்ப சாமுராய் லெஜெண்ட்" என்ற புதிய எபிசோடு ஒன்று ஏப்ரல் 05 அன்றும், இன்னொரு ஜப்பானிய மொழி படமான விட்ச் வாட்ச் என்ற சீரிஸும் ஏப்ரல் 06 அன்று வெளியாகவுள்ளது. மொத்தத்தில் இந்த ஏப்ரல் முதல் வாரம் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என்பதே ஓடிடி பார்வையாளர்களின் கருத்தாக நிலவுகிறது.