தக் லைப் பட விழாவில் ரஜினி கலந்து கொள்வாரா? | சென்னை பக்கம் வர மறுக்கும் சமந்தா? | ரமணா 2 உருவாக வாய்ப்பு இருக்குதா? | என்னது, ரஜினி சம்பளம் 300 கோடியா? | கோவிந்தா பாடல் நீக்கம் : சந்தானம், ஆர்யா சரண்டர் ஆனது ஏன்? | தாதாசாகேப் பால்கே பயோபிக் : இரண்டு படங்கள் போட்டி? | மீண்டும் ஹிந்தியில் கீர்த்தி சுரேஷ் | என் அழகான வாழ்க்கை துணை கெனிஷா : ரவி மோகன் அறிவிப்பு | ''பிள்ளைகளுக்காகவே வாழ்கிறேன்; என்னை தங்க முட்டையாகவே பார்த்தனர்'': ரவி மோகன் 'ஓபன் டாக்' | பாலகிருஷ்ணாவிற்கு கதை கூறிய ஆதிக் ரவிச்சந்திரன் |
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனமும் (பெப்சி) தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. சம்பள உயர்வு, திரைப்பட தயாரிப்பு செலவினங்கள் தொடர்பாக இரு சங்கத்திற்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் யாரை வைத்து வேண்டுமானாலும் படம் தயாரிக்கலாம் என்றும் அறிவித்தது.
இந்த நிலையில் மற்றொரு சங்கமான பாரதிராஜா தலைமையிலான தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம், பெப்சி தொழிலாளர்களை கொண்டே பணிகளை செய்வோம் என்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
சமீபத்தில் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கமும், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனமும் இணைந்து தொழிலாளர்கள் மறு சீரமைப்பு விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் பற்றிய பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் நிலுவையில் இருந்த பல்வேறு தொழிலாளர் சங்கங்களுக்கான தொழிலாளர் மறுசீரமைப்பு விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளன உறுப்பினர்களை வைத்து மட்டுமே படப்பிடிப்பு நடத்துவது என்று உறுதி செய்யப்பட்டது. இந்த முடிவின்படி தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கு ஆதரவு வழங்குகிறது. மேற்படி மறுசீரமைப்பு விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் வருகிற மே மாதம் முதல் அமுலுக்கு வருகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.