'எல் 2 எம்புரான்' சர்ச்சை: மோகன்லால் புதிய பதிவு | வி.ஜே. சித்து இயக்கி நடிக்கும் புதிய படம்! | நானியுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்த கீர்த்தி ஷெட்டி! | பார்க்கிங் பட தயாரிப்பாளருடன் இணையும் அர்ஜுன் தாஸ்! | விஜய் அரசியல் வருகை குறித்து நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி பதில்! | விக்ரம் 63 படத்தின் புதிய அப்டேட்! | கவிஞர் முத்துலிங்கத்தின் பாராட்டு விழா: திரைப்பிரபலங்கள் பங்கேற்பு | திருமண நிச்சயதார்த்தம் நடந்தது: வருங்கால கணவரின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அபிநயா! | சிவகார்த்திகேயனின் ‛பராசக்தி' படத்தில் இணைந்த பாப்ரி கோஸ்! | ‛96' படத்தின் இரண்டாம் பாகத்தில் மீண்டும் விஜய் சேதுபதி - திரிஷா! |
மலையாளத் திரையுலகத்தில் முக்கியமான நடிகர்களில் ஒருவர் சவுபின் ஷாகிர். 'பிரேமம், சார்லி, மகேஷின்டே பிரதிகாரம், கம்மாட்டிபாடம், பரவா, கும்பளாங்கி நைட்ஸ், வைரஸ், டிரான்ஸ், கோல்டு, கிங் ஆப் கோத்தா, மஞ்சுமேல் பாய்ஸ்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிக்கும் 'கூலி' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் நாகார்ஜுனாவுடன் இணைந்து நடித்தது குறித்த தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
“நாகார்ஜுனா சார், உங்களைப் பற்றி தெரிந்து கொண்டதும், உங்களுடன் வேலை செய்ததும் எனக்குப் பெருமை. 'கூலி' படத்தில் உங்களுடன் சில நல்ல நேரத்தை செலவிட்டுள்ளேன். அந்த எளிமை, ஸ்டைல், ஸ்வாக் எல்லாம் நீங்கள் கண்டுபிடித்தது. படப்பிடிப்பிலிருந்து திரும்பி வந்த பின் உங்களைப் பற்றி பேசுவதையோ, ரசிகராக உணர்ந்ததையோ இன்னும் நிறுத்த முடியவில்லை. நமது பாதைகள் மறுபடியும் சந்திக்கும் என நினைக்கிறேன்,” என்று புகழ்ந்து குறிப்பிட்டுள்ளார்.