வி.ஜே. சித்து இயக்கி நடிக்கும் புதிய படம்! | நானியுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்த கீர்த்தி ஷெட்டி! | பார்க்கிங் பட தயாரிப்பாளருடன் இணையும் அர்ஜுன் தாஸ்! | விஜய் அரசியல் வருகை குறித்து நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி பதில்! | விக்ரம் 63 படத்தின் புதிய அப்டேட்! | கவிஞர் முத்துலிங்கத்தின் பாராட்டு விழா: திரைப்பிரபலங்கள் பங்கேற்பு | திருமண நிச்சயதார்த்தம் நடந்தது: வருங்கால கணவரின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அபிநயா! | சிவகார்த்திகேயனின் ‛பராசக்தி' படத்தில் இணைந்த பாப்ரி கோஸ்! | ‛96' படத்தின் இரண்டாம் பாகத்தில் மீண்டும் விஜய் சேதுபதி - திரிஷா! | ராஜ்கமல் பிலிம்ஸ் பெயரில் மோசடி- எச்சரிக்கை செய்தி வெளியிட்ட கமல்ஹாசன்! |
தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர் சந்தீப் கிஷன். தமிழில் மாநகரம், யாருடா மகேஷ் என்ற திரைப்படத்திலும், கடந்தாண்டு வெளியான தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் மற்றும் ராயன் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் சந்தீப் கிஷன் நடித்திருந்தார். இவரது கதாபாத்திரம் ராயன் படத்தில் பெரிதும் பேசப்பட்டது.
தற்போது இவர் 'மசாகா' என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். திரிநாத் ராவ் நக்கினா இயக்கிய இந்த திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி வெளியாகியது. காமெடி கலந்த கதையில் உருவான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து தற்போது இந்த திரைப்படம் ஓ.டி.டியில் வெளியாக உள்ளது. அதன்படி, நாளை 28-ம் தேதி அன்று ஜீ 5 ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது. இதனால் இந்த படத்தை ஓ.டி.டி-யில் பார்க்க ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.